
பொதுவாய் கோயில்களுக்கு அவற்றின் சூழலையும், வடிவமைப்பையும் ரசிக்க மட்டுமே செல்வேன். எனக்கு மிகப்பிடித்த கோயில் - கங்கை கொண்ட சோழபுரம் கோயில். காரணம் அந்த புல்வெளியில் நிரம்பியிருக்கும் ரம்மியமான அமைதி. மென்மையான புல் வெளியில் விளைந்த கற்கோபுரங்கள் தரும் அழகு. அந்த சூழல் மிக ரசிக்கத்தக்க வகையில் இருக்கும். பிரார்த்தனைகளில் நம்பிக்கை இல்லாத போதும் எனக்கு மிகப்பிடித்த இடம் கோயில்களே!சென்னையில் இருப்பதால்,...