என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

Showing posts with label ஓவியங்கள். Show all posts
Showing posts with label ஓவியங்கள். Show all posts

02 November 2006

கனவுப் பெண்

பழைய ஓவியம் - 3

சின்ன வயதிலிருந்தே ஓவியர் மணியம் செல்வனின்(ம.செ.) ஓவியங்கள் என்றால் கொள்ளை ப்ரியம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காதவை அவரின் ஓவியங்கள். அதிலும் அவரின் கோட்டோவியங்களும் வாட்டர் கலர் ஓவியங்களும் மிகச்சிறப்பானவை. கல்கியில், கல்கியின் சிவகாமியின் சபதம் ம.செ. ஓவியங்களுடன் தொடராக வந்தபோது எனக்கு இரட்டை விருந்து! ம.செ படைத்த சிவகாமியின் அழகு சொல்லி மாளாது. அதில் வரும் அரண்மனைகளாகட்டும், அரச காலத்து உடைகளாகட்டும்... அனைத்தும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும். ஆனந்த விகடனில் தொடராக வந்த, சுஜாதாவின் 'பூக்குட்டி' கதைக்கான ஓவியங்களும் இப்படித்தான்... என்றும் மறக்க இயலாதவை.

பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல இயலாத எனக்கு, ம.செ வின் ஓவியங்களே பாடங்கள். எங்கள் வீட்டில் வார, மாத இதழ்களுக்குப் பஞ்சமேயில்லாததால், ம.செ வின் ஓவியங்கள் எதில் வந்தாலும் எனக்குக் கிடைத்துவிடும். நான் வரைந்தவற்றில், அவரின் ஓவியங்களைப் பார்த்து வரைந்ததுதான் நிறைய.
ம.செ வின் நாயகிகள், எனது கனவுப்பெண்ணின் சாயலுக்கு மிக நெருங்கியவர்கள்! அப்படி ஒரு நாயகிதான் கீழே இருப்பவர்...



ஓவியத்தின் தற்போதைய நிலை இங்கே...



நன்றி: adobe photoshop
Read More

26 July 2006

பழைய ஓவியம் - 2

சின்ன வயதில் நான் வரைந்த ஓவியங்களையும் எழுதிய சில கதைகளையும், பல வருடங்களுக்குப் பிறகு இப்போது பார்க்க நேர்கையில் மிகுந்த ஆச்சர்யமாய் இருக்கிறது. அப்போது வரைந்த/எழுதிய சூழல், அப்போது அதைப் பார்த்த/படித்தவர்கள் அளித்த ஊக்கங்கள் எல்லாம் பசுமையாய் நினைவுக்கு வருகின்றன!

பள்ளிக்கூட நாட்களில்(9-ம் வகுப்பிற்குள், எந்த வகுப்பு என நினைவில்லை!) எனது சின்ன வயது புகைப்படத்தைப் பார்த்து வரைந்தது இந்த ஓவியம்.


இந்த ஓவியத்தின் தற்போதய நிலை கீழே...


பழுப்பேறிய கறைகளை நீக்கியிருப்பதுடன், காகிதத்தில் இருந்த சுருக்கங்களையும் photoshop உதவிகொண்டு நீவி விட்டிருக்கிறேன்!
Read More

27 May 2006

பழைய ஓவியம் 1

கல்லூரிக் காலங்களில், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் "தொட்டால் தொடரும்" படித்து அவரின் தீவிர வாசகனாகிவிட்டேன். உண்மையில் அந்த நாவலைத் தொட்டால் முடியும்வரை தொடரும். பாதியில் வைக்க முடியாது. ஒவ்வொரு பாத்திரத்தின் குணாதிசயங்களையும் ஒளிந்திருந்து பார்த்ததுபோல் யதார்த்தமாய் எழுதியிருப்பர். கதையின் சம்பவங்கள் கூட வெகு இயல்பாய் நிகழ்வதுபோல் இருக்கும். முடிவு மட்டும் நமது தமிழ்சினிமாத்தனமாக இருக்கும்.

அப்போது ஆர்வக்கோளாரில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். கீழேயுள்ள படத்துன்! வரைந்த நினைவாக ஒரிஜினலை வைத்துக்கொண்டு அவருக்கு கலர் செராக்ஸ் எடுத்து அனுப்பினேன்.


புதிதாய் இப்போது எதுவும் வரைய நேரமில்லாவிட்டாலும், எனது பழைய ஓவியங்களை இங்கு ஒவ்வொன்றாக தொகுக்க முயற்சிக்கிறேன். உங்களுடன் பகிர்ந்துகொள்வதுடன், இவற்றை பத்திரமாக சேமித்ததுபோலவும் ஆகும் இல்லையா?!

Read More

17 March 2006

யார் இவர்?

கல்லூரி நாட்களில் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை செம போர் அடித்து உட்கார்ந்திருந்தபோது ஒரு வாரப்பத்திரிக்கையில் கண்ட புகைப்படம் ரொம்ப expressive-வா இருக்கேன்னு impress ஆகி பண்ணிய pencil sketch இது. சென்ற ஞாயிற்றுக்கிழமை செம போர் அடித்ததால் time pass-க்காக என் பொக்கிஷங்களை கிளறும்போது கிடைத்தது. உங்கள விட்டா வேற யார் கிட்ட இதெல்லாம் share பண்ணிக்க முடியும்?! பாத்திட்டு இது யார்னு சொல்லுங்க.



கரெக்டா சொல்லிட்டிங்கன்னா நல்லா வரைஞ்சிருக்கேன்னு அர்த்தம்! இல்லன்னா இது எப்பயோ பண்ணதுதானே இப்பொ வரைஞ்சிருந்தா நல்லா பண்ணியிருப்போம்னு மனச தேத்திக்கறேன் :)
Read More

22 November 2005

26 July 2005

தோழியின் நினைவாய்...

என் ப்ரிய தோழியின் பிறந்த நாள் பரிசாய் வரைந்தது...(2001)

click me to view large
மகாபலிபுரம் கடற்கரைக் கோயில் - எனக்கு மிகப்பிடித்த வடிவங்களில் ஒன்று.
Read More