என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

03 July 2007

கூர்க் - தொடர்ச்சி...

கூர்கில் எங்களது இரண்டாம் நாள் மிக இனிதாக விடிந்தது. வழக்கம்போலில்லாமல் அன்று நேரத்திலேயே எழுந்துவிட்டோம் - மலைப்பிரதேசத்தின் விடியல் அழகை ரசிக்க. எங்குமே காலை வெய்யிலின் அழகே தனி. காடு மலைகளுக்கிடையே என்றால் கேட்கவேண்டுமா என்ன? சுத்தமான கற்றை சுவாசித்தபடி சின்னதாக ஒரு நடைபயணம். இன்றைக்கும் இங்கேயே இருந்துவிடலாமா இல்லை வேறு ஏதாவது பார்க்கச்செல்லலாமா என்று யோசித்தபடி நடந்தோம்.
நிம்மதியாக இங்கேயே இன்றைக்கும் ஓய்வெடுக்கலாம் என்று தோன்றினாலும், புகைப்படங்களில் பார்த்த 'கோல்டன் டெம்பில்'-ன் பிரம்மாண்டமும், பளபளப்பும் ஆசைகாட்டியது. இனி இங்கே எப்போது வருவோமோ... அதையும் பார்த்துவிட்டே போய்விடலாம் என்று முடிவெடுத்தோம்.
காலை உணவுக்குப்பின் அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். புத்தர் ஆலயமான அந்த 'தங்கக் கோயில்' இருப்பது 'குஷால் நகர்'-ல். மடிக்கேரி சென்று அங்கிருந்து குஷால் நகர் சென்றோம். வழியில் தலைக்காவேரிக்குச் செல்லும் பாதைகள் பிரிகின்றன. நேரமின்மையால் அங்கெல்லாம் செல்ல முடியவில்லை.
மடிகேரியிலிருந்து குஷால் நகர் செல்லும் வழியில் 'நிசர்கதாமா' சென்றோம். காவேரி ஆற்றினால் சூழப்பட்ட ஒரு குட்டித் தீவுதான் இந்த நிசர்கதாமா. உள்ளே செல்ல ஒரு தொங்கும் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் மூங்கில் காடுதான் உள்ளே. குழந்தைகள் விளையாட ஊஞ்சல் முதலான நிறைய விஷயங்கள் இருக்கின்ற. நாங்கள் எதையும் விட்டுவைக்கவில்லை! மரத்தின் மேல் அமைக்கப்பட்ட ஒரு சின்ன குடில் இன்னொரு விசேஷம். அப்புறம் படகுசவாரி, யானை சவாரி கூட இருக்கிறது.
காவேரியில் இறங்கிக் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டுக் கிளம்பினோம். அங்கிருந்து மிக அருகிலேயே குஷால் நகர் தங்கக் கோயில். கூர்கில் நான் ரொம்பவும் ரசித்தவற்றுள் இந்தக் கோயிலும் ஒன்று. கோயிலின் கூரை முதல் எல்லாமே தங்கத்தில் பளபளக்கிறது. நல்ல வடிவமைப்பு. சின்னச்சின்ன அழகிய சித்திர வேலைப்படுகளும் ஓவியங்களும் ரசிக்க வைக்கின்றன.
உள்ளே சென்றால் பிரம்மாண்டமான புத்தர் சிலை. அதுவும் தங்கத்தில் ஜொலிக்கிறது. நீளம் மற்றும் சிவப்பு வண்ணப் பின்னனியில் சிலை மிக எடுப்பாக இருக்கிறது. மனிதனின் அகந்தையை அழிக்க, சமய வேறுபாடின்றி பெரும்பாலான ஆலயங்களில் பயன்படுத்தப்படும் "பிரம்மாண்டம்", இங்கும் சரியாய்ப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது!
கூர்கின் முழு அழகையும் ரசிக்க வேண்டுமானல் நிச்சயம் இரண்டு நாட்கள் போதாது. குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தங்கி சுற்றிப்பார்க்க வேண்டும். திரும்பத் திரும்ப ஊட்டி கொடைக்கானல் என்று சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் கூர்க் ஒரு நல்ல மாற்றாக அமையும்!

16 மறுமொழிகள்:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புகைப்படங்கள் அருமையாக் இருக்கிறது..இந்தியாவிலேயே இத்தனை அழகான இடங்கள் இருக்க சுற்றிப்பார்த்து முடிக்க வாழ்நாள் போதாது போலவே..

கப்பி | Kappi said...

போன வருடம் சென்றபோது அந்த பாலத்துல உங்கள மாதிரியே போஸ் கொடுத்து நானும் ஒரு போட்டோ எடுத்து வச்சிருக்கேன் :)))

தல காவேரி போகலையா? அங்க மலை மேல இருந்து பார்த்தா அரபிக்கடல் தெரியும்னு சொன்னாங்க...நாங்க மழைக்காலத்துல போனதால பனி, மேக மூட்டம்...பத்தடி தள்ளி என்ன இருக்குன்னே தெரியல...நீங்க போயிருந்தா கடல் தெரிஞ்சுதான்னு கேட்டிருக்கலாம் :))

//கூர்கின் முழு அழகையும் ரசிக்க வேண்டுமானல் நிச்சயம் இரண்டு நாட்கள் போதாது. குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தங்கி சுற்றிப்பார்க்க வேண்டும்.//

ரிப்பீட்டு :)

புகைப்படங்களுடன் அழகா விவரிச்சிருக்கீங்க அருள்!

Unknown said...

பகிர்வுக்கு நன்றி அருள்!

துளசி கோபால் said...

படங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கே. அதிலும் மூங்கில் மேலே உக்கார்ந்துக்கிட்டு இருக்கும்
நம்ம ஆஞ்சநேயர் சூப்பர். அருமையான இடத்துக்குத்தான் போய்வந்துருக்கீங்க.

இந்தியாவிலேயே ஆயிரக்கணக்கான அழகான இடங்களை இன்னும் பார்க்கவே இல்லை. எப்பக்
கொடுத்துவச்சுருக்கோ?

அருள் குமார் said...

ஆமாங்க முத்துலெட்சுமி,
எனக்கும் இப்படி அடிக்கடி தோணும். தமிழ்நாட்டிலேயே நாம் பார்க்காத அருமையான இடங்கள் எவ்வளவோ இருக்கின்றன! இப்பல்லாம் நண்பர்களின் திருமணம் என்று ஏதாவது ஊருக்குச் சென்றால் பக்கத்தில் சுற்றிப்பார்க்க என்ன ஊர் இருக்கிறது என்று பார்த்து, அங்கேயும் போய் வருவது வழக்கமாகிவிட்டது.

அருள் குமார் said...

கப்பி பயலுக்கு நன்றி!

//போன வருடம் சென்றபோது அந்த பாலத்துல உங்கள மாதிரியே போஸ் கொடுத்து நானும் ஒரு போட்டோ எடுத்து வச்சிருக்கேன் :)))//

அந்த படத்தில் இருப்பது நானல்ல. என் நண்பர்.

தலைக்காவேரியெல்லாம் பார்க்க இன்னொரு முறை செல்லவேண்டும் :(

நன்றி கல்வெட்டு!

அருள் குமார் said...

நன்றி டீச்சரம்மா!

//படங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கே. //

இப்பதான் கத்துகிட்டு இருக்கோம். பாக்கலாம் எப்படி டெவலப் ஆகுதுன்னு :)

ச.பிரேம்குமார் said...

அருள் அண்ணா,

கூர்க் படங்கள் மிகவும் அருமை. பெங்களூரில் இருந்த போது, நண்பர்கள் எல்லாம் சேர்ந்து நீங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்து இடங்களுக்கு சென்று வந்தோம். நிசர்கதாமாவில் மாலை சுமார் 6 மணி வாக்கில் அடர்ந்த இருட்ட்டில் சுற்றிக்கொண்டிருந்தோம். மறக்க முடியாத ஓர் அனுபவம் அது.
அருமையான அந்த இடங்களை பற்றி பதிவிட்டதற்கும் பழைய நினைவுகளை திரும்பிப்பார்க்க செய்தமைக்கும் நன்றிகள்.

மேலே இருக்கும் உங்கள் ப‌ட‌மும் கூர்கில் எடுக்க‌ப்ப‌ட்ட‌தா? ரொம்ப‌ அழ‌கா இருக்கீங்க‌ அந்த‌ப்ப‌ட‌த்தில் :)

ச.பிரேம்குமார் said...
This comment has been removed by a blog administrator.
அருள் குமார் said...

நன்றி பிரேம்குமார்!

எனக்கு நீங்காள் தனிப்பட்ட முறையில் எழுதியதையும் மட்டுறுத்தலில் தெரியாமல் அனுமதித்துவிட்டேன். மன்னிக்கவும்.

//மேலே இருக்கும் உங்கள் ப‌ட‌மும் கூர்கில் எடுக்க‌ப்ப‌ட்ட‌தா? ரொம்ப‌ அழ‌கா இருக்கீங்க‌ அந்த‌ப்ப‌ட‌த்தில் :)//

ப்ரொஃபைல் படத்தைத்தானே கேட்கிறீர்கள்? நானே தான். நாந்தான் இப்படி(ஃபோட்டோல அழகா இருக்கீங்க?!) பலபேரை கலாய்ப்பேன். எனக்கேவா?!!

CVR said...

உங்கள் போட்டோ பதிவுகள் அத்தனையும் பார்த்தேன்!!!
படங்கள் எல்லாம் அழகாக இருந்தது!!
நல்ல திறமை இருக்கிறது உங்களிடம்!!

வாழ்த்துக்கள்!! :-)

அருள் குமார் said...

நன்றி CVR!

சரவணகுமரன் said...

படங்கள் அருமை.

நான் போகும்போது எடுத்த படங்கள் இங்கே

http://www.saravanakumaran.com/2008/07/blog-post_3227.html

Information said...

Nalla irukku

பத்ம ப்ரியா said...

புகைப்படங்கள் மிக அருமை. ஏன் தொடர்ந்து எழுதவில்லை அருள்?

அருள் குமார் said...

நன்றி பத்ம ப்ரியா! எழுத ஆர்வமிருந்தும் ஏனோ மனசும் நேரமும் அமையவில்லை! உங்களைப் போலாவது அவ்வப்போது எழுதலாம் தான். பார்க்கலாம் :)