என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

02 November 2006

கனவுப் பெண்

பழைய ஓவியம் - 3

சின்ன வயதிலிருந்தே ஓவியர் மணியம் செல்வனின்(ம.செ.) ஓவியங்கள் என்றால் கொள்ளை ப்ரியம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காதவை அவரின் ஓவியங்கள். அதிலும் அவரின் கோட்டோவியங்களும் வாட்டர் கலர் ஓவியங்களும் மிகச்சிறப்பானவை. கல்கியில், கல்கியின் சிவகாமியின் சபதம் ம.செ. ஓவியங்களுடன் தொடராக வந்தபோது எனக்கு இரட்டை விருந்து! ம.செ படைத்த சிவகாமியின் அழகு சொல்லி மாளாது. அதில் வரும் அரண்மனைகளாகட்டும், அரச காலத்து உடைகளாகட்டும்... அனைத்தும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும். ஆனந்த விகடனில் தொடராக வந்த, சுஜாதாவின் 'பூக்குட்டி' கதைக்கான ஓவியங்களும் இப்படித்தான்... என்றும் மறக்க இயலாதவை.

பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல இயலாத எனக்கு, ம.செ வின் ஓவியங்களே பாடங்கள். எங்கள் வீட்டில் வார, மாத இதழ்களுக்குப் பஞ்சமேயில்லாததால், ம.செ வின் ஓவியங்கள் எதில் வந்தாலும் எனக்குக் கிடைத்துவிடும். நான் வரைந்தவற்றில், அவரின் ஓவியங்களைப் பார்த்து வரைந்ததுதான் நிறைய.
ம.செ வின் நாயகிகள், எனது கனவுப்பெண்ணின் சாயலுக்கு மிக நெருங்கியவர்கள்! அப்படி ஒரு நாயகிதான் கீழே இருப்பவர்...



ஓவியத்தின் தற்போதைய நிலை இங்கே...



நன்றி: adobe photoshop

20 மறுமொழிகள்:

- யெஸ்.பாலபாரதி said...

கவலைஅயை விடுங்க அருள்.. எல்லா பதிவர்களும் உங்க வீட்டுல வந்து கல்யாணத்தைப் பத்தி பேச, இந்த ஒரு பதிவு போதும்...
விரைவில் ஆஜர் ஆகிடுவோம்.

அருள் குமார் said...

ரொம்ப தேங்ஸ் தல :)

ஓவியத்தின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா? ஏதோ சிம்பாலிக்காக சொல்வதுபோல் இல்லை ;)

பொன்ஸ்~~Poorna said...

//ஏதோ சிம்பாலிக்காக சொல்வதுபோல் இல்லை ;) //

இல்லையே.. புரியலையே!

ஆனா, ரொம்ப பழைய காலத்துக் கதாநாயகி யாரையோ நினைவுப் படுத்துது...

- யெஸ்.பாலபாரதி said...

;-)))))))

அருளு அசத்துறியேப்பா...

அருள் குமார் said...

பொன்ஸ்,
நிஜமாவே புரியலையா இல்ல என் வாயல சொல்லவைக்கணும்னு பாக்கறீங்களா?

என் கனவுகளும் அவ்வளவு பழையதாகிவிட்டதுன்னு சொல்றமாதிரி இருக்கு அந்த படம். அப்பப்போ புதுப்பிக்க வேண்டியிருக்கு :)

பாலா, எங்க வீடுக்கு வர்றப்போ இதையும் சேத்து சொல்லுவீங்க என்கிற நம்பிக்கைலதான் இத இங்க சொல்றேன் ;)

குழலி / Kuzhali said...

எலேய் நடிகை சீதா படத்தையும், வள்ளி பட நாயகி (அதான் ரோசாப்பூ சின்ன ரோசாப்ப்பூ) படத்தையும் கலந்து கட்டி அடிச்சிருக்க போல... ம்...

- யெஸ்.பாலபாரதி said...

அடப்பாவீVVVVVVVV,
ஆள் சேக்குறது நியாயம். அதுக்காக இப்படியா...? அடுத்த வலைபாதிவாளர்கள் மாநாடு அருள் வீட்டில் தான்.
:-))))

மதுமிதா said...

உங்கள் கனவுப்பெண்ணை எப்படி ம.செ தெரிஞ்சு வெச்சிருக்காரு:-)

ஓவியங்களை வெச்சு பித்துப் பிடிச்சுத்திரிஞ்ச காலங்களை ஞாபகப்படுத்திட்டீங்க அருள்.

பொன்ஸ்~~Poorna said...

//சீதா படத்தையும், வள்ளி பட நாயகி (அதான் ரோசாப்பூ சின்ன ரோசாப்ப்பூ) படத்தையும் கலந்து கட்டி //
எனக்கு பத்மினி நினைவு வந்தது..

அருள் குமார் said...

//எலேய் நடிகை சீதா படத்தையும், வள்ளி பட நாயகி (அதான் ரோசாப்பூ சின்ன ரோசாப்ப்பூ) படத்தையும் கலந்து கட்டி அடிச்சிருக்க போல... ம்... //

குழலி,
நாம மணியம் செல்வனை காப்பி அடிச்சதோட சரி. நீ சொன்னதெல்லாம் அவர்தான் செஞ்சிருக்கணும் :)

//ஆள் சேக்குறது நியாயம். அதுக்காக இப்படியா...? // என்னங்க பண்றது... எல்லோரும் விட்ல வந்து சொல்றேன் சொல்றேன்னு சொல்றீங்களே தவிர யாரும் வந்து சொன்னபாடில்ல. அதான் இப்படி... :)))

அருள் குமார் said...

//ஓவியங்களை வெச்சு பித்துப் பிடிச்சுத்திரிஞ்ச காலங்களை ஞாபகப்படுத்திட்டீங்க அருள்.//

மதுமிதா, நீங்களும் ஓவியரா? (or) நீங்கள் ஓவியருமா?

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

ம.செ வின் ஓவியங்கள் தனிப்பாணி. கோட்டோவியங்களில் மெல்லிய வண்ணங்களில் தண்ணீர் வண்ண ஓவியங்கள்.. எல்லா ஓவியங்களிலும் மெல்லிய அழகோடு கூடிய பெண்கள்.. கடவுள் சார்ந்த ஓவியங்களில் தெரியும் தெளிவு... மிகவும் அற்புதம். என் ஆரம்ப காலங்களில் நானும் ம.செவின் ஓவியங்களை சார்ந்து வரைந்திருக்கிறேன்..

அருள் குமார் said...

//என் ஆரம்ப காலங்களில் நானும் ம.செவின் ஓவியங்களை சார்ந்து வரைந்திருக்கிறேன்.. //

அட! நீங்களும் ஓவியரா? உங்கள் ஓவியங்கள் எதையும் உங்கள் பதிவில் இட்டிருக்கிறீர்களா? எனில் பார்க்க ஆசை.

Anonymous said...

Wowww..its beautiful arul..excellent job!! my dad has the same talent..vaalthukkal

அருள் குமார் said...

நன்றி தூயா :)

Anonymous said...

அருள் கல்யாணத்திற்கு தயாராகீடீங்க போல இருக்கு!!!. என்ன ம.செ உதவியோட பொண்ணு தேடறீங்களா?
வாழ்த்துக்கள்.

சேதுக்கரசி said...

எனக்கும் ம.செ. ஓவியங்கள்னா ரொம்பப் பிடிக்கும். உங்க ஓவியங்களும் நல்லா வந்திருக்கு.

We The People said...

எனக்கு மீண்டும் கோகிலா ஸ்ரீதேவி தான் நியாபத்துக்கு வருது... அவிகளுக்கு கல்யாணம் ஆயிடுச்சே?? பரவாயில்லையா?? ;) ஓ.கேன்னு போனிகப்பூர்க்கு போன் போட்டா..ஷப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா தப்பிச்சோமுடான்னு ஓட்டிவந்து விட்டுட்டு போயிடுவாரு!!!

என்ன சொல்லறீங்க... கொஞ்சம் சீதா சயலும் இருக்கு... அவங்களும் ஃப்ரீ தான் போல...

Aruna said...

நானும் கூட நிறைய ம.செ படங்களைப் பார்த்து வரைந்திருக்கிறேன்...ம்ம்ம் மலரும் நினைவுகள்...
அன்புடன் அருணா

அருள் குமார் said...

ஹைய்யோ! கிட்டத்தட்ட இரண்ண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு பின்னூட்டம்(எழுதுவதை விட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது என நினைக்கிறேன்!). பார்க்க மிக சந்தோஷமாயிருக்கிறது. மிக்க நன்ற்று அருணா.