
பழைய ஓவியம் - 3சின்ன வயதிலிருந்தே ஓவியர் மணியம் செல்வனின்(ம.செ.) ஓவியங்கள் என்றால் கொள்ளை ப்ரியம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காதவை அவரின் ஓவியங்கள். அதிலும் அவரின் கோட்டோவியங்களும் வாட்டர் கலர் ஓவியங்களும் மிகச்சிறப்பானவை. கல்கியில், கல்கியின் சிவகாமியின் சபதம் ம.செ. ஓவியங்களுடன் தொடராக வந்தபோது எனக்கு இரட்டை விருந்து! ம.செ படைத்த சிவகாமியின் அழகு சொல்லி மாளாது. அதில் வரும் அரண்மனைகளாகட்டும்,...