என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

06 October 2006

சொச்சங்கள்




விதை, ஓவியம்,
பார்வை, சைகை,
மௌனம்

உவமை, உருவகம்,
செயல்முறை விளக்கம்

இன்னும், இன்னும்...

எதைக்கொண்டும் முழுதாய்
சொல்லித்தீர்க்க முடிவதில்லை-
பட்டுணர்ந்தவற்றை!

6 மறுமொழிகள்:

ப்ரியன் said...

அருமை அருள்...

சரவணன் said...

நல்லா இருக்குங்க அருள்
நன்றி...

அருள் குமார் said...

ப்ரியனுக்கும் சரவணனுக்கும் என் நன்றி!

Anonymous said...

அருள்,

உங்களை சமீப காலமாக அடிக்கடி (புகை படங்களில்)பார்த்துவிடுகிறேன்(Orkutl,thamil manathil,etc..).நானும் உங்களது வலைப் பக்கத்தினை பார்த்து படித்து,எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பது உண்டு... ஆனால் ஏதோ ஒரு காரணங்களால் தள்ளிக் கொண்டே இருந்தது..

ஆனால் இன்றுதான் வாய்ப்பு கிடைத்து.. எல்லா பதிவுகளையும் படித்து கொண்டு இருக்கிறேன்....

//எதைக்கொண்டும் முழுதாய்
சொல்லித்தீர்க்க முடிவதில்லை-
பட்டுணர்ந்தவற்றை//

உணர்ந்தவற்றை
சொல்லிவிட்டால்
மகானாய் !!!

இராம. வயிரவன் said...

அருள்குமார், உங்கள் கவிதைகளில் வார்த்தைச் செறிவும், கற்பனையும், கருத்தும் மனத்தைத் தொடுகின்றன.

Unknown said...

appadi pattunarnthavattrukku arugil varubavatrai KAVITHAIGAL yendrum,miga arugilvarubavatrai NALLA KAVITHAIGAL yendrum solgirom.(ie.LIKE THIS)