என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

06 May 2005

மங்கையர்க்கரசி

உறவுகள் எல்லாம்
முறை சொல்லியே
அழைக்கும் அம்மாவை

பெயர் சொல்லியழைக்க
அலுவலக நண்பருமில்லை
அடுக்களை தாண்டாத அவளுக்கு

அப்பா பெயருக்கு கடிதமெழுதி
அம்மாவை விசாரிக்கும்
பிறந்தவீடு தவிர
கடிதம் எழுதவும்
ஆளில்லை அவளுக்கு

அசைகின்ற சொத்துக்கள்
அம்மாவை அலங்கரித்தாலும்
பெயர்சொல்லும் அசையாத சொத்துக்கள்
அப்பாவின் பெயர் தாங்கியே

அவசர மளிகைக்கு
பாத்திரம் நீட்டும்
அடுத்தாத்து மாமியும்
'குமார் அம்மா' என
என் பெயர் இழுப்பாள்
அம்மாவை அழைக்க

திடீரென யாரேனும் கேட்டால்
சற்று யோசித்துதான்
சொல்லவேண்டியிருக்கிறது
பல வருடங்களாய்
பயன்படுத்தப்படாத
அம்மாவின் பெயரை

14 மறுமொழிகள்:

பத்ம ப்ரியா said...

Hi..

It is too good.. ya.. now i remember that my mother's name is not used much more in her life..

Good poem..write more
M.PP

Sud Gopal said...

ரொம்ப நல்லா இருக்கு.

இத்தன நாளா இந்தப் பதிவு பக்கம் வராமல் இருந்ததற்கு வருந்துகிறேன்.

தொடர்ந்து எழுதுங்க.

சுதர்சன்.கோபால்

அருள் குமார் said...

My sincere thanks to Ms. Padmapriya and Mr. Sudharsan Gopal.

பாலராஜன்கீதா said...

// திடீரென யாரேனும் கேட்டால்
சற்று யோசித்துதான்
சொல்லவேண்டியிருக்கிறது
பல வருடங்களாய்
பயன்படுத்தப்படாத
அம்மாவின் பெயரை //

அப்பா, அம்மாவை ஏதேனும் செல்லப் பெயரிட்டு அழைப்பாரோ? :-))
(என் அம்மா பெயர் பாலா. அப்பா பெயர் ராஜேஸ்வரன். என் பெயர் பாலராஜன்:-))

அன்பு said...

அருமையான கவிதை.
உங்களின் இந்தக்கவிதை தி.ஒ.கவிதை குழுமத்தில் வந்திருக்கிறதா!? எங்கோ வாசித்த ஞாபகம்....

குழலி / Kuzhali said...

//அருமையான கவிதை.
உங்களின் இந்தக்கவிதை தி.ஒ.கவிதை குழுமத்தில் வந்திருக்கிறதா!? எங்கோ வாசித்த ஞாபகம்....
//
என் பதிவில் படித்திருப்பீர், அருள்குமாரிடமிருந்து சுட்டு நான் போட்டேன்

சிவா.. said...

thappe illa kuzhali....I liked the lines very much. Arul, really you are disturbing me thru the writing.....

Sivasu

Anonymous said...

Nanbar Aruluku,

Kavidhai arumai. Manamarndha parattugal. ungalin padaipugal menmelum valara vazhthugiren.

enRenRum-anbudan.BALA said...

அருமையான கவிதை !!!

தொடர்ந்து எழுதுங்க.

Anonymous said...

its fine, keep it up,thanks to our amma.

பொன்ஸ்~~Poorna said...

ம்ம்ம்.. எங்க அம்மா பேருக்கு இத்தனை பிரச்சனை இல்லைன்னாலும், என் தோழியோட அம்மாக்கள் பெயர் எனக்குத் தெரியாது.. அதை நினைவுப் படுத்துது

சரி, அப்பா எப்படி அழைப்பார்? அப்போ வந்துடுமே பேரு?!! ;)

அருள் குமார் said...

பொன்ஸ்,

எங்க அம்மாவை அப்பா பெயர் சொல்லி அழைத்ததேயில்லை! யோசித்துப்பார்த்தால் ஆச்சர்யமாய்த்தான் இருக்கிறது!

லக்ஷ்மி said...

நல்ல கவிதை.

அருள் குமார் said...

நன்றிங்க!