என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

14 March 2006

சங்கிலித் தொடர்...

உண்மை அவர்களின் அழைப்பை ஏற்று இத்தொடரில் நானும் இணைகிறேன்.

எவ்வளவோ மனிதர்களும், சம்பவங்களும் நிரம்பிய இந்த வாழ்வில், கீழே தொகுத்துள்ள ஒவ்வொன்றிலும் நான்கை மட்டும் குறிப்பிடுவது மிக கடினம். அதிலும் திரைப்படங்கள்... chance-ஏ இல்ல!இருந்தாலும்... இந்த சங்கிலித் தொடரின் நியதிக்கு உட்பட்டு மனதில் சட்டென தோன்றிய நான்குகள் இங்கே...

பணிகள்:
  1. கல்லூரி நாட்களில், A.V.C கல்லூரி மாணவர் இதழான "இளந்தூது" -வில் இணை ஆசிரியராக.
  2. அதே நாட்களில், "நுண் கலை மன்றம்" செயலாலர்.
  3. முதுகலை முடித்த பின் மூன்று ஆண்டுகளாக மென்பொருள் வல்லுனர்.
  4. இப்போது... நண்பனுடன் சேர்ந்து சொந்தமாக மென்பொருள் தயாரிக்கும் தொழில்.

பொழுது போக்குகள்:
  1. திரைப்படங்கள்.
  2. இசை கேட்ப்பது.
  3. தொலைபேசி அரட்டை (அ) கடலை.
  4. புகைப்படக்கருவியுடன் ஊர் சுற்றுவது.

திரைப்படங்கள்:
  1. கோகுலத்தில் சீதை. (எத்தனையோ படங்களை பலமுறை பார்த்திருந்தாலும், தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு காட்சிகள் பார்த்த படம் இது!)
  2. சலங்கை ஒலி.
  3. அழியாத கோலங்கள்.
  4. மல்லி. (சந்தோஷ் சினவின் குறும்படம்).

வாழ்ந்த இடங்கள்:
  1. குடியாத்தம்(குடியேற்றம்).
  2. கடலூர்.
  3. மாயிலாடுதுறை.
  4. சென்னை.
(சொந்த ஊர்களான சோழன்குடிக்காடு கிராமமும், விருத்தாசலமும் அவ்வப்போது விடுமுறைக்கு சென்றுவந்த இடங்கள்!)

உணவு வகைகள்:
  1. பழைய இட்லி வீணாகக்கூடாதென செய்கிற இட்லி உப்மா முதற்கொண்டு அம்மா சமைக்கிற அனைத்தும்.
  2. pizza & burger.
  3. egg briyani.
  4. கடலை மிட்டாய்.
காதலித்த பெண்கள்: எல்லாமே ஒருதலை காதல்தாங்க! :(
  1. ஒண்றாம் வகுப்பில் கரிய விழிகளும், சுருள் முடியும், துடுக்குப்பேச்சுமாய் என்னைக்கவர்ந்த ஷண்முகப்பிரியா.
  2. ஓசை படம் பார்த்ததிலிருந்து இன்றுவரை பேபி ஷாலினி.
  3. +1, +2 chemistry tution-ல் வகுப்புக்கு வந்தாலும் வராவிட்டாலும், என்னை பாடம் கவனிக்க இயலாமல் செய்தவள்.
  4. இன்னும் முற்றுபெறாத ஓவியமாய், நினைவறிந்த வயதிலிருந்து நானறிந்த பெண்கள் அனைவரின் சாயலையும் உள்வாங்கி, என் கற்பனை எனக்குள் வரைந்துகொண்டே இருக்கும் என் dream girl!

பிடித்த இடங்கள்:
  1. எங்கள் கிராமம்(சோழன்குடிக்காடு).
  2. என்னில் பெரிதும் மாறுதல்களை ஏற்படுத்திய A.V.C கல்லூரியும் அதனை சார்ந்த இடங்களும்.
  3. பாட்டி வீட்டின் பின்புறம், முன்பிருந்த நந்தவனம்.
  4. மயிலாடுதுறை கச்சேரி தெருவில் நாங்கள் தங்கியிருந்த மொட்டைமாடி ஒற்றை அறை.

பிடித்த சுற்றுலா தலங்கள்:
  1. கங்கைகொண்டசோழபுரம் கோயில்.
  2. மாமல்லபுரம்.
  3. கொடைக்கானல்.
  4. சென்றுவந்த எல்லா அருவிகளும்.

செல்ல விரும்பும் இடங்கள்:
  1. அந்தமான்.
  2. மாலத்தீவுகள்.
  3. நயாகரா.
  4. இலங்கை.
மிகவும் பத்திரப்படுத்தி வைத்திருப்பவை:
  1. Packet size notebook-லிருந்து அவசரமாய் எழுதி, கிழித்துப் பின் கசக்கி எறியப்பட்ட - எனக்கு வந்த முதல் காதல் கடிதம்!
  2. நண்பர்கள் autograph எழுதிக்கொடுத்த ஏடுகள்.
  3. என் பதின்ம வயதுகளில் சிலவற்றை பதிவுசெய்து வைத்திருக்கும் நாட்குறிப்புகள்.
  4. இப்போதும் என்னை ஆச்சர்யப்படுத்தும், சின்ன வயதில் நான் வரைந்த சில ஓவியங்களும் எழுதிய சில கதைகளும்.
என்னுடன் நிரைய்ய்ய்ய்ய்ய்ய பேசிய தோழர்கள்:
  1. அப்பா.
  2. புருஷோத்தமன்(குழலி).
  3. சுந்தரமூர்த்தி.
  4. வீரமணி.
என்னுடன் நிரைய்ய்ய்ய்ய்ய்ய பேசிய தோழிகள்:
  1. திருமதி A. சுகன்யா.
  2. திருமதி V. ஜானகி.
  3. திருமதி S. வசந்தி (என் தங்கை).
  4. திருமதி B. பூரணி.
என்றும் மறக்க இயலாத நினைவுகள்:
  1. விடுமுறை நாட்களில் கிராமத்தில் விளையாடிக்களைத்த எங்களின் கால்களை மடியில் போட்டு, பாதத்தில் விளக்கெண்ணை தேய்த்து, ராஜா ராணி கதைகள் சொல்லி, எங்கள் பாட்டி எங்களை சுகமாய் தூங்க வைத்த இரவுகள்.
  2. பள்ளியில் அமைதியாய் இருக்க பலமுறை பணிக்கப்பட்டும், கட்டுப்படுத்தவே முடியாமல் புருஷொத்தமனுடன் பேசிப்பேசி அடிவாங்கிய ஆசிரியர் வராத வகுப்புகள்.
  3. நானும் நண்பன் தர்மராஜனும் மிக விரும்பி கஷ்டப்பட்டு நடத்திய இளந்தூது ஏழாம் ஆண்டு விழா.
  4. இளங்கலை படிப்பு முடித்து, கதறி அழுதபடி நண்பர்களை பிரிந்து ஊர்திரும்பிய ஒரு மதிய பொழுது.

இன்னும் படிச்சிட்டு இருக்கீங்களா?!!! நிஜமாவே thanks-ங்க!

இத்தொடரில் நான் இணைக்க விரும்பும் நபர்கள்:
  1. புருஷோத்தமன் (குழலி பக்கங்கள்)
  2. பத்மப்பிரியா (சிறகுகள்) - சில மாதங்களாக இவரை இங்கே காண இயலவில்லை. ஒருவேலை பார்த்தால் எழுதட்டும்.
  3. முகமூடி
  4. நிவேதா (ரேகுப்தி..!!)

நன்றி.


9 மறுமொழிகள்:

துளசி கோபால் said...

உங்க 'சோப்' சிற்பங்களை இப்பத்தான் பார்த்தேன். ரொம்ப அழகா இருக்கு. அதான் செஞ்சுட்டோமேன்னு வுட்டுறாதீங்க. இன்னும்
பல சிற்பங்களைச் செஞ்சு பாருங்க. புள்ளையார் விதவிதமாச் செய்யலாம். செஞ்சு? எனக்கு அனுப்பிருங்களேன்:-)

ஜோ/Joe said...

ஓ!குழலி நண்பரா நீங்க..விருதாச்சலம் ,உளுந்தூர் பேட்டை,கடலூர் எல்லாம் அடிக்கடி வந்திருக்கேன்.

அருள் குமார் said...

நன்றி துளசி கோபால்,
இதுவரை செய்த சிற்பங்கள் அனைத்தும் நண்பர்களுக்கு கொடுக்கத்தான் செய்தேன். உங்களுக்கும் ஒன்று செய்துதருகிறேன்.

அருள் குமார் said...

ஆமாம் ஜோ.
குழலி என் நண்பர்தான். உங்களுக்கு எந்த ஊர்?

துளசி கோபால் said...

நன்றிங்க. பத்திரமா எடுத்து வையுங்க. அங்கே வர்றப்ப தாங்க.

ஏங்க அதென்ன ஒண்ணு? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க:-)

பூங்குழலி said...

ஓ!, நீங்கள் கடலூர் பக்கமா?
அப்படியென்றால் அடிக்கடி பாண்டிச்சேரி பக்கம் வருவீர்கள் போல?

:))


//பழைய இட்லி வீணாகக்கூடாதென செய்கிற இட்லி உப்மா முதற்கொண்டு அம்மா சமைக்கிற அனைத்தும்//

மனதை தொட்டுவிட்டீர்கள்...
யாருக்குத்தான் அம்மாவின் கைபக்குவம் பிடிக்காது.

அடிக்கடி நிறைய எழுதுங்கள்.
நன்றி,
பூங்குழலி

அருள் குமார் said...

நன்றி பூங்குழலி.

நீங்கள் எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள் எனத்தெரியவில்லை. எனினும், எனக்கு பிடித்த ஊர்களில் ஒன்று என்பதால் பாண்டிச்சேரிக்கு அடிக்கடி செல்வேன்.

உங்கள் ஊர் பாண்டியா?

குழலி / Kuzhali said...

//+1, +2 chemistry tution-ல் வகுப்புக்கு வந்தாலும் வராவிட்டாலும், என்னை பாடம் கவனிக்க இயலாமல் செய்தவள்.
//
:-))

//நீங்கள் எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள் எனத்தெரியவில்லை.
//
என்னா மாப்ள இது கூட தெரியாதா? இதற்கெல்லாம் ஒரே அர்த்தம் தானே... ஆனா பாவம்...

அருள் குமார் said...

குழலி,

//+1, +2 chemistry tution-ல் வகுப்புக்கு வந்தாலும் வராவிட்டாலும், என்னை பாடம் கவனிக்க இயலாமல் செய்தவள்.
//

நீ எழுதுகிற சங்கிலித்தொடரில் இந்த வரியை அப்படியே repeat பண்ணலாம். நான் தான் பெயர் எதும் போடவில்லை இல்லையா!

//நீங்கள் எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள் எனத்தெரியவில்லை.
//
புரியுது... இருந்தாலும் first time நம்ம பதிவுல பின்னூட்டம் போடறாங்க. அதெல்லாமா கேப்பாங்கன்னு ஒரு doubt. அதான்!

//ஆனா பாவம்...//

யார்? எதற்கு?