என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

27 June 2006

சில புரிதல்கள்

எதிர்பாராமல் இன்றுஉன் குழந்தைகளுடன்நீ எதிர்ப்பட்ட சந்திப்பில்வெறுமையாய்ப் புன்னகைத்துபரஸ்பரம் குடும்பநலம்விசாரித்துக் கொள்ளமுடிகிறநம் உள்ளங்கள்மாறிமாறிச் சொல்லியிருக்கின்றன-"நீ இல்லாதஒரு வாழ்க்கையைநினைச்சு கூடபாக்க முடிலடா..."யார் இல்லாவிட்டாலும்யாரும் வாழமுடியுமெனகடந்த சில வருடங்களில்மெளனமாய்சொல்லிக் கொடுத்திருக்கிறதுகால...
Read More

19 June 2006

பெரிய மனுஷன்

(ஜூன் 2006 - தேன்கூடு போட்டிக்கு எழுதிய சிறுகதை)நாளைக்குக் காலையில் வீட்டில் இருப்போம் என்று நினைத்ததுமே மனசு இறக்கை கட்டிக்கொண்டது. அனேகமாக பஸ்ஸில் அனைவரும் தூங்கிவிட்டார்கள். நான் மட்டும் முகத்திலறையும் குளிர்ந்த காற்றை ஒரு வன்மையுடன் தாங்கிக்கொண்டு கொட்டக் கொட்ட விழித்திருந்தேன். நானும் கவனித்துவிட்டேன், ஊரிலிருந்து ஹாஸ்டலுக்குத் திரும்பும்போதுதான் பஸ்ஸில் ஏறியவுடன் தூக்கம் வருகிறது எனக்கு.கடந்த...
Read More

12 June 2006

நாங்க போட்ட நாடகம் 2

முதல் பகுதி இங்கே...ஒரு வழியாக ஒத்திகைகள் முடிந்து அரங்கேற்ற நாளும் வந்தது. முன்னரே திட்டமிட்டபடி, அன்று காலையிலேயே ஒவ்வொருவராக, ஆனதாண்டவபுரம் வினோத் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தோம். வீடு நல்ல விசாலமாய் இருந்தது. ஓட்டு வீடுதான் என்றாலும் பெரிய திண்ணைகள், விசாலமான ஆளோடி, வீட்டின் நடுவே மழை வெயில் காற்று எல்லாம் கொண்டு தரும் வாசல் என வசதியாய் இருந்தது. இந்த எல்லா இடங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி...
Read More

06 June 2006

நாங்க போட்ட நாடகம்

(சற்றே பெரிய சிறுகதை)அந்த நாடகப்போட்டியில் கலந்துகொள்ள நாங்கள் முடிவுசெய்ததற்கு இரண்டு மிக முக்கியமான காரணங்கள் இருந்தன. முதலாவதும், மிக முக்கியமானதுமான காரணம் எங்கள் எதிரி(பின்னே... நாங்கள் போட்டியிடுகிற அத்தனை மேடையிலும் எங்களை ஜெயிக்கிறவள் எங்கள் எதிரிதானே?) பத்மா & கோ அந்த போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை! இரண்டாவது, அந்த போட்டிக்கு நடுவராக வரப்போகிறவர் எங்கள் டீமில் இருக்கும் வினோத்தின்...
Read More