சின்ன வயதில் நான் வரைந்த ஓவியங்களையும் எழுதிய சில கதைகளையும், பல வருடங்களுக்குப் பிறகு இப்போது பார்க்க நேர்கையில் மிகுந்த ஆச்சர்யமாய் இருக்கிறது. அப்போது வரைந்த/எழுதிய சூழல், அப்போது அதைப் பார்த்த/படித்தவர்கள் அளித்த ஊக்கங்கள் எல்லாம் பசுமையாய் நினைவுக்கு வருகின்றன!
பள்ளிக்கூட நாட்களில்(9-ம் வகுப்பிற்குள், எந்த வகுப்பு என நினைவில்லை!) எனது சின்ன வயது புகைப்படத்தைப் பார்த்து வரைந்தது இந்த ஓவியம்.
இந்த ஓவியத்தின் தற்போதய நிலை கீழே...
பழுப்பேறிய கறைகளை நீக்கியிருப்பதுடன், காகிதத்தில் இருந்த சுருக்கங்களையும் photoshop உதவிகொண்டு நீவி விட்டிருக்கிறேன்!
18 மறுமொழிகள்:
நல்லா இருக்கு.. ப்ரோபைலில் இதைப் போட்டுடுங்க ;)
முட்டைக்கண்ணோடு நல்லா chubbyயா இருக்கே!
இதுவும் ஒரு அழகுதான். பொன்ஸ் பேச்சைக் கேளுங்கள்:-))))
அருள்,
நல்ல ஒவியம். பாராட்டுக்கள்.
ஐடியாவுக்கு நன்றி பொன்ஸ் :)
//இதுவும் ஒரு அழகுதான். பொன்ஸ் பேச்சைக் கேளுங்கள்:-)))) //
துளசி மேடம், நீங்களும் சொன்னப்புறம் கேக்காம இருக்க முடியுமா? கூடிய சீக்கிரம் மாத்திடறேன் :)
நன்றி வெற்றி.
ஓவியம் அழகாயிருக்கிறது அருள்!
ஓவிய குழ்நதை நாயகனும் :)
பொன்ஸும் துளசி அக்காவும் சொன்னதை நான் வழி மொழிகிறேன் சீக்கிரமா படத்தை மாத்திடுங்க :)
ஓவியம் மிகவும் அழகாயிருக்கிறது அருள்!இந்த ஓவியம் சற்று உங்களின் ப்ரோபைலில் உள்ளதை போலவே உள்ளது.முட்டைக்கண்ணோடு நல்லா chubbyயா (நன்றி துளசி அக்கா),
//துளசி மேடம், நீங்களும் சொன்னப்புறம் கேக்காம இருக்க முடியுமா? கூடிய சீக்கிரம் மாத்திடறேன் :)//
நல்ல முடிவு,
அன்புடன்...
சரவணன்.
நன்றி ப்ரியன்.
//ஓவிய குழ்நதை நாயகனும் :)// இதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. ஸ்மைலி போடாம சொல்லியிருக்கலாம் :(
நன்றி உங்கள்(எங்கள்) நண்பன் :)
ப்ரொஃபைலில் படத்தை மற்றச்சொன்ன எல்லோருக்கும்: மாத்தியாச்சுங்கோவ்... :)
ஓவியம் அழகாக இருக்கிறது.
நாள் போகப் போக உங்கள் வயது குறைகிறது அருள், (புரொஃபைல் புகைப்படங்களில்தான்) :-).
எங்காவது ஒரு மூலையில் தற்போதைய புகைப்படத்தையும் போட்டு வையுங்கள். பார்க்க வேண்டியவர்களுக்கு உதவியாக இருக்கும் ;-)
அன்புடன்,
மா சிவகுமார்
படம் அருமை அருள்
நன்றி நாகு.
// பார்க்க வேண்டியவர்களுக்கு உதவியாக இருக்கும் ;-)//
சிவகுமார், சமீபத்தில் உங்கள் பதிவில் உங்கள் புகைப்படம் இணைக்கப் பட்டிருப்பதைப் பார்த்தேன். காரணம் இன்று அறிந்தேன் ;)
நன்றி தேவ்.
அருள், என்னைப் பார்க்க வேண்டியவங்க எல்லாம் பார்த்து முடிச்சாச்சே :-)
உங்களைச் சந்தித்த பிறகுதான் புகைப்படம் இணைக்க கூடுதல் உந்துதல் வந்தது. உங்கள் புகைப்படப் பரிச்சயத்தில் பார்த்ததும் அடையாளம் தெரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதே மாதிரி நம்ம முகத்தையும் காட்டி விடுவோம் என்றுதான் பழைய புகைப்படம் ஒன்றை போட்டது.
அன்புடன்,
மா சிவகுமார்
ரெண்டு படத்தையும் பாத்ததுல நீங்க Photoshopல கிங்குனு புரிஞ்சுக்கிட்டேன். இதே மாதிரி வேலய GIMPல செய்யலாமா தலெ ? Photoshop வாங்குற அளவுக்கு கைல டப்பு இல்ல அதான் அட்வைஸ் கேக்குறேன்.
போட்டோஷாப் பெரிய கடலுங்க. அதுல கிங் ஆகறதுக்கெல்லாம் நிறைய பயிற்சி வேணும். இந்த படத்துல நான் 98% ஒரே ஒரு டூல் தான் யூஸ் பண்ணியிருக்கேன்.
GIMP பத்தி நமக்கு தெரியலயே தல :(
sir ippo than mudhn mula ungal pakkthirku vandhane....padikka niraya vishyangal iruku..ellam padichituu coment eludhugirane..ippo varrta
நன்றி கார்த்திக். 'sir' எல்லாம் வேண்டாமே :)
Is it you?
Illai kulantha alaga irukke!!
// kulantha alaga irukke//
அதனாலதாங்க சொல்றேன். இது நான் தான் :)
Post a Comment