என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

03 July 2006

ஆறு great வழியல்கள் :)

முன்பு நாலு விளையாட்டிற்கு அழைத்த உண்மை இப்போது ஆறு விளையாட்டிற்கும் அழைத்திருக்கிறார்கள். நன்றி உண்மை :)

முன்னாடியே நாலு நாலா என்ன பாதிச்சதெல்லாம் எழுதிட்டதால, இப்போ கொஞ்சம் வித்தியாசமா வேற எதாச்சும் எழுதலாமேன்னு யோசிச்சேன். நாம ஏதாவது இக்கட்டுல மாட்டி வழியறப்போ மத்தவங்களுக்கு அது ஜாலியாவே இருக்கும். ஏன் கொஞ்ச நாள் கழிச்சு யோசிச்சுப் பாத்தா நமக்கே அது ஜாலியாத்தான் இருக்கும்! வழியறது ஒரு கலை! நமக்கு அது கை வந்தது!! வாழ்க்கைல நான் நிறைய வழிஞ்சிருக்கேன். அதுல எனக்கு பெஸ்ட்டுன்னு தோணின ஆறு இங்கே...

1. சின்ன வயசுல ஒருவாட்டி லீவுக்கு பாட்டி வீட்டுக்குப் போயிருந்தப்போ, வீட்ல அம்மா, சித்தி, மாமி, பாட்டியெல்லாம் பக்கத்துத் தெருல யாரோ ஒரு பொண்ணு வயசுக்கு வந்திருக்குன்னு சொல்லி அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வந்தாங்க. எனக்கு ரொம்ப நாளாவே 'அப்படின்னா என்ன?'-ன்னு ஒரு டவுட்டு. ஆனா வெளிய யார்கிட்டயும் கேக்க முடியாத மேட்டர்னு மட்டும் புரியுது. ஆர்வம் தாங்காம அன்னிக்கு என் தங்கை கிட்ட கேட்டுட்டேன். அவ விழுந்து விழுந்து சிரிக்கிறா. அப்போ அங்க வந்த எங்க மாமி என்னடின்னு கேக்க, 'இங்க பாருங்க மாமி... குமார் வயசுக்கு வர்றதுன்னா என்னன்னு கேக்கறான்...'-னு போட்டுக்கொடுத்துட்டு சிரிச்சிக்கிட்டே ஓடிட்டா! எங்க மாமியப் பாத்து வழிஞ்சேன் பாருங்க அன்னிக்கு..! 'ஆமா.. ரொம்ப முக்கியம். போடா.' னுட்டு போய்ட்டாங்க!!

2. B. Sc. படிச்சிட்டு இருந்தப்போ, ஒரு ஞாயித்துக்கிழமை ஹாஸ்டல்ல நிம்மதியா தூங்கிட்டு இருந்தேன். early morning 8.30 இருக்கும். ஒரு சீனியர் கைல ஸ்வீட்டோட வந்து எழுப்பினாரு. அவருக்கு அன்னிக்கு B'Day வாம். சொல்லிட்டு ஸ்வீட் எடுத்துக்கச் சொன்னாரு. ஸ்வீட் எடுத்துக்கறதுக்கு முன்னாடி விஷ் பண்ணனும்ல... அதான மறியாத. 'முதல்ல கையக் குடுங்க... best of luck...' னு உளறிடேன்! பசங்கல்லாம் ஒரே சிரிப்பு. 'ஹி ஹி.. சாரிங்க... happy b'day...' னு வழிஞ்சேன். அன்னிக்கு முழுக்க அவர எதிர்ல பாக்கறப்போல்லாம் அவர் சிரிக்க நான் வழிய... அப்படியே போச்சு!

3. B. Sc. final year-ல நம்ம friend வினோத் ஒரு பொண்ண பல மாசமா லுக் விட்டுகிட்டு இருந்தான். தினமும் அவளப்பத்தி ஒரே புலம்பல்தான். அவ பேர வினிதா வினிதா வினிதான்னு 3006 முறை(அதென்ன கணக்கோ தெரியல!) ஒரு நோட்ல எழுதி வச்சிருந்தான். அவதான் வாழ்க்கையேன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். அந்தப் பொண்ணோட friend ப்ரியா எனக்கும் friend. நீ தான்டா எப்படியாச்சும் ப்ரியா கிட்ட சொல்லி இந்த மேட்டர வினிதாவுக்கு கன்வே பண்ணனும்னு தினமும் ஒரே தொல்லை. சரி போய்த்தொலையறான்னு ப்ரியா கிட்டப் பேசினேன். 'அய்யய்யோ இதெல்லாம் நான் சொல்ல முடியாது. வேணும்னா உன் friend-ட கூட்டிகிட்டு வா... நான் அவளுக்கு intro கொடுக்கறேன். அவனே அவ கிட்ட சொல்லிக்கட்டும்' - னு ப்ரியா சொல்ல, இவன் கிட்ட அத வந்து சொன்னேன். சரிடா ஆனா நான் பேசறப்போ நீயும் என் கூட இருக்கனும்னான்.

ஒருநாள் காலேஜ் முடிஞ்சி காலேஜ் பஸ் மயிலாடுதுறை வர்றப்போ அவ இறங்கற ஸ்டாப்பிங்ல மீட் பண்றதா plan எல்லாம் போட்டாச்சு. நானும் வினோத்தும் முன்னாடியே அவனோட சைக்கிள்ல போய் அந்த ஸ்டாப்பிங் பக்கத்து பொட்டிக் கடை கிட்ட வெயிட் பண்றோம். பையன் நகத்தக் கடிக்கிறான்... கைல இருந்த நோட்டக் கிழிக்கிறான்... ஒன்னும் இருப்புக் கொள்ளல அவனுக்கு. பஸ் வர்றதப் பாத்ததும் ரெம்பப் பரபரப்பாயிட்டான்.

பஸ் வந்து நின்னதும் முதல்ல ப்ரியா இறங்கி வந்தா. என்னப் பாத்து கூப்பிட்டா. இவன பின்னடியே வாடான்னுட்டு நான் ப்ரியா கிட்டப் போய் பேசறேன். 'அவகிட்ட எதாவது சொல்லியிருக்கியா...'-னு கேட்டேன். 'நான் எதுவும் சொல்லல, எத்தேச்சையா மீட் பண்ண மாதிரி இருக்கட்டும். நான் இதுல சம்பந்தப்பட விரும்பல'-னு ப்ரியா சொல்லிகிட்டு இருக்கப்பவே வினிதா பஸ் விட்டு இறங்கி ப்ரியா கிட்ட வர்றா...

'ஏய் வினி, இது என் friend அருள்... உன் கிட்ட ஏதோ பேசணுமாம்...' என்று ப்ரியா அவளுக்கு என்னை intro கொடுக்க, அவள் 'ஹாய்... சொல்லுங்க...'-ன்னா. 'இல்லங்க... இது என் friend வினோத்...'-னு சொல்லிக்கிட்டே திரும்பறேன்... இவன ஆளக்காணோம்! கடை கிட்டயே நிக்கறானோன்னு அங்கப்பாத்தா அங்கயும் இல்ல!! எங்கடா போயிருப்பான்னு சுத்திமுத்திப்பாத்தா, ரொம்ப தூரத்துல சைக்கிள்ல வேகமாப் போய்க்கிட்டிருக்கான்! அப்புறம் என்னத்தச் சொல்ல.... 'ஹி.. ஹி... ப்ரியா உங்களப் பத்தி நிறைய சொல்லியிருக்காங்க... அதான் ச்சும்மா உங்ககிட்ட பேசலாம்னு...'- இப்படி ஏகத்துக்கும் வழிஞ்சி ரெம்பக் கொடுமையாப் போச்சி போங்க!

4. Crescent Engineering College ல MCA சேந்த முதல் வருஷம். வந்த கொஞ்ச நாள்லயே நம்மளோட ஓவியத்திறமை எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சிடுச்சி(class நடக்கறப்போ சும்மா இருந்தாத்தானே!). எங்க டிப்பார்ட்மெண்ட் Symposium வந்தப்போ ஆடிட்டோரியம் வாசல்ல ரங்கோலி போட, என்ன ஸ்கெட்ச் போட்டுத்தர சொன்னாங்க. function-க்கு முத நாள் காலேஞ் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் போனப்புறம் வேலைய ஆரம்பிச்சோம். என்னையும், லேடிஸ் ஹாஸ்டல்ல இருந்து நாலு BE பொண்ணுங்களையும் ரங்கோலிக்கு assign பண்ணி இருந்தாங்க.

ஒரு ஆளு கோட்டு சூட்டோட கைல எரிஞ்சிக்கிட்டு இருக்கற ஒரு டார்ச் பிடிச்சிகிட்டு இருக்கற மாதிரி out line போடுங்க, நாங்க கலர் அடிச்சிக்கறோம்னு சொன்னாங்க. சரி ஒரு ஆரை மணி நேரம் டைம் கொடுங்கன்னு சொன்னேன். அப்போ நீங்க போட்டு வைங்க, நாங்க ஹாஸ்டல் போயிட்டு வறோம்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. நான் என் திறமையெல்லாம் பயன்படுத்தி 20 நிமிஷத்துலயே முடிச்சிட்டு இவங்களுக்காகக் காத்திருந்தேன். நாலு பேரும் வந்து பாத்திட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. பின்ன... நான் வரைஞ்ச ஆளு கைல பிடிச்சிட்டு இருக்கறது நாலு பெரிய பேட்டரி போடற டார்ச் லைட்டாச்சே :(

'ஹைய்யோ... நாங்க சொன்னது இந்த டார்ச் இல்லீங்க... ஒலிம்பிக்ல எல்லாம் எடுத்துகிட்டு ஓடுவாங்களே... அது..'-ன்னாங்க. அன்னிக்கு வழிஞ்ச மாதிரி என்னிக்குமே வழியலீங்க! பசங்கன்னக்கூட பரவால்ல. பொண்ணுங்க வேறையா... ரெம்ப அவமானமாப்போச்சு அன்னிக்கு. நான் என்னங்க பண்றது... அதுவரைக்கும் டார்ச்னா எங்க ஊர்ல ராத்திரில வயலுக்கு மக்கள் தண்ணிகட்ட போறப்போ எடுத்துட்டுப் போற பேட்டரி லைட்டுன்னுதான் நினைச்சிட்டு இருந்தேன்!

5. நான் இதுக்கு முன்னாடி வேலை செஞ்ச கம்பெனில, ஒரு நள் என்னோட சீட்ல கால்மேல கால் போட்டு ரிலாக்ஸ்டா உக்காந்து போன்ல ரொம்ப நேரமா கடல போட்டுகிட்டு இருந்தேன். போன்ல ஒரே சிரிப்பு, கிண்டல் தான். ஒரு பத்து நிமிஷமா எங்க boss என் பின்னாடி வந்து நின்னுகிட்டு எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்திருக்கார்! friends எல்லாம் செம டென்ஷன் ஆகி, எனக்கு ஏதேதோ சிக்னல் கொடுத்திருக்காங்க. கடல போடறப்போ நாம எத கவனிச்சிருக்கோம்?! ஒருவழியா பேசி முடிச்சிட்டு திரும்பிப்பாத்தா இவர் நிக்கிறார்! 'ஏம்பா... வேல நேரத்துல என்ன இது...?!' - னு தலைல அடிச்சிக்காத குறையா அவர் கேக்க, வழியறதத்தவிர நமக்கு வேற என்ன வழி..! அவர் என்னல்லாம் கேட்டிருப்பார்னு நான் பேசினதெல்லாம் திரும்பவும் நினைச்சுப்பாத்து அடிக்கடி சிரிச்சுக்குவேன் :)

6. ஒரு நாள் நான், என் friend, அவளோட அம்மா மூணு பேரும் T Nagar போயிருந்தோம். அங்க இருந்து பக்கத்துல எங்கயோ போறதுக்கு ஆட்டோ புடிக்கணும். ரொம்பப் பக்கம் தான், 20 ரூபாக்கு மேல கொடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டோம். அப்போ அங்க வந்த ஆட்டோவ நிறுத்தி, போக வேண்டிய இடத்தச் சொல்லி, எவ்ளோப்பான்னு நான் கேட்க, அவன் 15 ரூபா கேட்டிருக்கான். நான் அத கவனிக்காம ரொம்ப சீரியசா 'ஏம்பா உனக்கே அநியாயமா இல்ல... பக்கத்துலதான... 20 ரூபா வாங்கிக்க'-னு பேரம் பேசறேன். 'சார் நான் 15 ரூபாதான கேட்டேன்' னு அவன் பாவமா சொல்ல, என் friend விழுந்து விழுந்து சிரிக்கிறா. 'இனிமே பேரம்பேச அருளதான் கூட்டிகிட்டு போகணும்'னு சொல்லி அவங்க அம்மாவும் சிரிக்கிறாங்க. சும்மாவே என்ன பயங்கரமா கலாய்க்கற என் friend-க்கு இந்த சம்பவம் ரொம்ப நாள் யூஸ் ஆச்சு. ஒவ்வொருவாட்டி இத அவ சொல்லிக் காட்டறப்பயும் பதிலுக்கு வேற எதும் சொல்ல முடியாம வழிவேன்!

டிஸ்கி: மூணாவது சம்பவத்துல என்னோட பேரத்தவிர மத்தவங்க பேரெல்லாம் மத்தியிருக்கேன் :)

அப்புறம் என்னங்க... அடுத்த ஆறு பேர கூப்பிடணுமா...? போனவாட்டியே நான் கூப்பிட்ட 4 பேர்ல யாருமே 4 விளையாட்டுக்கு வரல. அதுல மூணு பேர் அந்த அழைப்ப பாக்கவே இல்லன்னு நினைக்கிறேன். நானும் தனிமடல் போட்டு அவங்களுக்குச் சொல்லாம விட்டுட்டேன். சரி அழைப்பது நம் கடமை, வருவது அவங்க உரிமைன்னு நினைச்சு அடுத்த ஆறு பேர கூப்பிட்டுடுவோம். நாம விளையாட்டோட விதிய மீறக்கூடாதில்லையா... :)

1. குழலி
2. கவிதா
3. இளவஞ்சி
4. நாம், இந்திய மக்கள்
5. செல்வராஜ்
6. சிங். செயக்குமார்

41 மறுமொழிகள்:

பொன்ஸ்~~Poorna said...

அருள்.. சுப்பர்.. அந்த கோலம், அப்புறம் அந்த ஓடிப் போன பிரண்டு.. நான் நினைச்சி நினைச்சி சிரிக்க வச்சிட்டீங்க..

பேசாம வினிதா பேரை எழுதின நோட்டைக் கொடுத்து நான் தான் இப்படி எழுதிகிட்டு இருக்கேன்னு சொல்லி இருக்கலாம் இல்ல?!! :)))

பாரதி தம்பி said...

//early morning 8.30 இருக்கும்.//
:))
//தினமும் அவளப்பத்தி ஒரே புலம்பல்தான். அவ பேர வினிதா வினிதா வினிதான்னு 3006 முறை(அதென்ன கணக்கோ தெரியல!)//
:)) எண்ணிப் பார்த்த உம்மை என்ன செய்றதாம்..

நல்ல நகைச்சுவை கதை எழுத மீண்டும் முயலலாம்

அருள் குமார் said...

//பேசாம வினிதா பேரை எழுதின நோட்டைக் கொடுத்து நான் தான் இப்படி எழுதிகிட்டு இருக்கேன்னு சொல்லி இருக்கலாம் இல்ல?!! :))) // அய்யய்யோ... அப்புறம் அப்போ நான் love பண்ணிட்டு இருந்த பொண்ண என்னங்க பன்றது?! :)

பாரதி தம்பி said...

//அய்யய்யோ... அப்புறம் அப்போ நான் love பண்ணிட்டு இருந்த பொண்ண என்னங்க பன்றது?! :)//
அட! இது வேறயா.. அத சொல்லுங்க மொதல்ல..

கவிதா | Kavitha said...

அருள் நல்லா சிரிக்க வைச்சீங்க உங்க வழிச்சல் மூலமா.. ம்ம்... ஆமா ஆறு விளையாட்டுல என்னைய மட்டும் கூப்பிட்டுடீங்க.. என் அணில் அப்புறம் கோச்சிக்கும்..அது தொல்லை தாங்காது... அதனால.. எனக்கு பதிலா வேற யாராவது.. கூப்பிடுங்களேன்.. ப்ளீஸ்..

அருள் குமார் said...

வாங்க ஆழியூரான் :)

// எண்ணிப் பார்த்த உம்மை என்ன செய்றதாம்..//

அய்யோ, நான் எண்ணியெல்லாம் பாக்கலங்க... அவந்தான் சீரியல் நம்பர் போட்டு எழுதி வச்சிருக்கானே!

//நல்ல நகைச்சுவை கதை எழுத மீண்டும் முயலலாம் // - கண்டிப்பாக :)

//அட! இது வேறயா.. அத சொல்லுங்க மொதல்ல.. // 2வது, பத்தாவது, 12, UG, PG, Office னு நிறைய இருக்குங்க..! ஒன்ன சொல்லிட்டு மத்தத சொல்லலன்னா நல்லா இருக்கதுல்ல. பொறுமையா எல்லாத்தையும் சொல்லுவோம் :)

அருள் குமார் said...

//அதனால.. எனக்கு பதிலா வேற யாராவது.. கூப்பிடுங்களேன்.. ப்ளீஸ்..
//
ஹலோ... வெளாட்டுக்கு வரலன்னு டீசன்ட்டா சொல்றீங்களா?! அதெல்லாம் ஒத்துக்க முடியாது :)

துளசி கோபால் said...

நல்லாவே வழிஞ்சிருக்கீங்க.:-)))))

அருள் குமார் said...

//நல்லாவே வழிஞ்சிருக்கீங்க.:-)))))//
ஹி ஹி... ஆமாம் மேடம் :)

நாகை சிவா said...

//early morning 8.30 இருக்கும். //
என்னங்க மிட் நைட்ட போயி Early Morning னு சொல்லுறிங்க.....

மயிலாடுதுறையில் படித்தீர்களா, A.V.C யா?

அருள் குமார் said...

சிவா,
//மயிலாடுதுறையில் படித்தீர்களா, A.V.C யா? // ஆமாங்க. இன்னமும் வருஷத்துக்கு 2 முறையாவது அங்க போய்ட்டு வந்திடுவேன் :)

ஜொள்ளுப்பாண்டி said...

அருள் ஆறு வழிசலும் அசத்தல் போங்க ! :)))))

Anonymous said...

//'ஹைய்யோ... நாங்க சொன்னது இந்த டார்ச் இல்லீங்க... ஒலிம்பிக்ல எல்லாம் எடுத்துகிட்டு ஓடுவாங்களே...

ROTFL :)-

அடுத்து அந்த ஆட்டோ மேட்டர். என் Friend கூட ஒருதடவை இப்படி சொதப்பி எங்க கிட்ட வசமா மாட்டினான்

ரொம்ப ரசிச்ச பதிவு இது

நாகை சிவா said...

அங்க என்ன வேலை, அதுவும் வருசத்துக்கு ரெண்டு தடவை போகும் அளவுக்கு :))

அண்ணனுக்கு எந்த ஊரு.....

அருள் குமார் said...

@ ஜொள்ளுப்பாண்டி:
இப்போ நினைச்சுப்பாத்தா எனக்கும் அசத்தலாத்தாங்க இருக்கு. ஆனா ஒவ்வொன்னும் நடந்தபோ நிஜமாவே ரொம்ப நொந்துபோய்ட்டேன்!

@ விக்னேஷ்:
//ரொம்ப ரசிச்ச பதிவு இது // நன்றிங்க :)

அருள் குமார் said...

சிவா,
மறக்க முடியாத பல சம்பவங்கள் நிகழ்ந்த இடம் அது. நாங்க படிக்கறதோட மட்டும் இல்லாம கலை, இலக்கியம்னு எங்களை ஊக்குவிச்ச கல்லூரி என்பதால் அதன் மீது ஒரு தனிப்பாசம். முதல் விடுதி வாழ்க்கை அமைந்ததும் அங்குதான். முக்கியமான வளர்சிதை மாற்றங்கள் நிகழ்ந்ததும் அங்குதான் :)

நாங்கள் நடத்திய மாணவர்கள் இதழான 'இளந்தூது' 17 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அதன் ஆண்டுவிழாவிற்கு கண்டிப்பாக சென்றுவிடுவேன். மற்றபடி என்ன விஷயமாக மயிலாடுதுறை சென்றாலும் எங்க காலேஜ், இன்னமும் அங்க இருக்கிற எங்கள் ஆசிரியர்கள், நங்க தவமா கிடந்த ஆடிட்டோரியம் எல்லாத்தையும் ஒரு எட்டு பாத்துட்டு வர்றது வழக்கம் :)

அருள் குமார் said...

சொல்ல மறந்திட்டேன் சிவா,
நமக்கு சொந்த ஊரு விருத்தாசலம். ஆமாம்... ஆமாம்... கேப்டன் தொகுதியேதான் :)

மணியன் said...

மிகவும் இரசித்த நகைச்சுவை பதிவு.இனி உங்கள் பதிவை ஒரு எட்டு பார்த்துவிடுவேன்.

அருள் குமார் said...

மிக்க நன்றி மணியன் :)

We The People said...

அருள்,

சூப்பரா இருக்குங்க 6 மேட்டரும்.

1. அந்த வயசுக்கு வர மேட்டர இப்பவாவது தெரிஞ்சுகிட்டீங்களா?

2. வினோத் அப்பறம் லவ் மேட்டர வினிதாகிட்ட சொன்னாரா? அப்பறம் என்ன நடந்தது? கொஞ்சம் விரிவா ஒரு பதிவு போடுங்களேன் ப்ளீஸ்.

3. அந்த டார்ச் மேட்டர்ல இருக்கறதுலயே சூப்பர். எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு!

4. கடல மேட்டர் இன்றைக்கு நேற்று ஆரம்பிச்சது இல்ல போல!!! இன்னும் Phoneயை கீழ வெக்காம வருக்கரீங்க... பார்த்துங்க கரிஞ்சர போவுது.

அப்பறம் கேக்க மறந்திட்டேன், என் பையனுக்கு நாளைக்கு பிறந்தநாள் நல்லதா ஒரு Gift வாங்கனும், கொஞ்சம் வந்து பேரம் பேசி வாங்கி தாங்க ப்ளீஸ்!!! ஹீ! ஹீ! ஹீ!

என்னோட வழிச்சலெல்லாம் பதிவா போட முடியுமாங்க? ஏங்க வம்புல மாட்டிவிடரீங்க. Try செய்து பார்ப்போம் 'A'தாவது பதிவுக்கு போடற மாதிரி இருக்கான்னு ;)

நட்புடன்,

ஜெயசங்கர்

கப்பி | Kappi said...

டார்ச் மேட்டரில் பல்பு வாங்கிய அண்ணன் அருள் குமார்.. :))

குழலி / Kuzhali said...

மன்ச்சிக்கோ பா... நாலுல விட்டதை ஆறுல அடிச்சிடலாம்....

நாகை சிவா said...

உண்மை தான் அருள், நானும் அப்படி தான், எப்ப ஊருக்கு போனாலும் ஒரு தடவையாவது கல்லூரிக்கு ஒரு விசிட் அடித்து விடுவேன். பல விசயங்களை சொல்லி குடுத்த இடம். A.V.C, யில் படித்த பலர் எனக்கு பாடம் எடுத்து உள்ளார்கள். (நமக்கு நாகப்பட்டினம்)

ilavanji said...

டார்ச்சு பல்பு சூப்பருங்க அருள்! :)

அழைப்புக்கு நன்றி! ஏற்கனவே மழை ஸ்ரேயாவும் கூப்பிட்டு இருக்காங்க! சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன்!

அருள் குமார் said...

@ we the people:
//கடல மேட்டர் இன்றைக்கு நேற்று ஆரம்பிச்சது இல்ல போல!!! //

ஹி ஹி.. :)

//என்னோட வழிச்சலெல்லாம் பதிவா போட முடியுமாங்க?// நீங்க வழிஞ்சதத்தான் சொல்லனும்னு இல்லீங்க, மத்தவங்க எழுதியிருக்கற 6 எல்லாம் பாருங்க. ஆளுக்கு ஒரு விதமா எழுதறாங்க. உங்களுக்கு எப்படித்தோணுதோ அப்படி எழுதுங்க :)

அருள் குமார் said...

@ கப்பி பய:
வாங்க sir. ஆனாலும் இவ்வளவு சந்தோஷம் ஆகாதுங்க!

@ குழலி:
okப்பா... சீக்கிறமா வந்து எளுதுப்பா... :)

@ நாகை சிவா:
//(நமக்கு நாகப்பட்டினம்)// அதான் பேர்லயே தெரியுதேங்க :)
நீங்க எந்த கல்லூரி?

@ இளவஞ்சி:
//சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன்! //
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் :)

கஸ்தூரிப்பெண் said...

//சின்ன வயசுல ஒருவாட்டி லீவுக்கு பாட்டி வீட்டுக்குப் போயிருந்தப்போ//

என்னடா, நம்ம ஊர் வாடை அடிக்கிறதே என்று பார்த்தேன்.

மாயவரத்தாரே! நல்லா இருக்கு வழிசல்கள். பேசாமால் “வழிசல்கள்” என்று ஒரு தொடர்சங்கிலி ஆரம்பித்துவிடலாம்

அருள் குமார் said...

வாங்க கஸ்தூரிப்பெண்,
நமக்கு சொந்த ஊரு மாயவரம் இல்ல. இருந்தாலும் அதும் சொந்த ஊரு மாதிரிதான் :) நீங்க மாயவரமோ?!

//பேசாமால் “வழிசல்கள்” என்று ஒரு தொடர்சங்கிலி ஆரம்பித்துவிடலாம் //
நல்லா இருக்கே ஐடியா... நீங்களே தொடருங்களேன் :)

பாலசந்தர் கணேசன். said...

நீங்கள் செய்தது போலவே, என் வகுப்பு மாணவி ஒருவரும் சுற்றுலா பயணத்தில் செய்து வாங்கி கட்டி கொண்டார்

அருள் குமார் said...

//நீங்கள் செய்தது போலவே,// ஆட்டோக்கு பேரம் பேசின மேட்டர சொல்றீங்கலா பாலச்சந்தர் :))

Unknown said...

இப்போதான் உங்க ஆறை பாத்தேன். ரொம்ப சுவாரசியமா இருக்கு. அதுவும் மூணாவது நாலாவது வழிசல்கள் டாப்!! நம்ம லைப்லயே எவ்ளோ ப்ராக்டிகல் ஜோக்ஸ் நடக்குது பாருங்க. சும்மா லிஸ்ட் போடாம நிகழ்வுகளா போட்டு கலக்கிட்டீங்க.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

புன்னகைத்தபடியே முன்னரே படித்துச் சென்றிருந்தாலும் பின்னூட்டம் விடத் தவறிவிட்டேன். உங்கள் அழைப்பிற்கு நன்றி. எழுதக் கொஞ்சம் நாட்கள் ஆகலாம். அதுவரை பொறுத்துக் கொள்க. (எழுதாமலும் போகலாம்!)

அருள் குமார் said...

நன்றி ரமணி :)

நன்றி செல்வராஜ்.

//எழுதக் கொஞ்சம் நாட்கள் ஆகலாம். அதுவரை பொறுத்துக் கொள்க. (எழுதாமலும் போகலாம்!) //

தங்கள் சித்தம் என் பாக்கியம் :)

லதா said...

வழிசல் ஆறு நன்றாக ஓடியது
:-)

அருள் குமார் said...

//வழிசல் ஆறு நன்றாக ஓடியது// :)

நன்றி லதா.

இலவசக்கொத்தனார் said...

அடடா இவ்வளவு நாள் இது கண்ணுல படாம போயிருச்சே. நல்லாத்தாம்பா வழிஞ்சிருக்கே. (ஆமாம் எங்க டீச்சர் என்ன சொன்னாலும் நாங்க அதையேத்தான் சொல்லணும்.)

//அந்த ஆட்டோ மேட்டர். //

நானும் நம்ம ஃப்ரெண்டும் ஒரு தபா மும்பை போயி அவன் ஹிந்தியில பேசறேன்னு சொல்லிப் பச்சீஸுக்கும் (25) பச்சாஸுக்கும் (50) வித்தியாசம் தெரியாம ஒரு கடையிலெ பேரம் பேசி, அங்க எல்லாரும் சிரிச்சு நம்ம மானத்தை எடுத்த கதை மாதிரியே இருக்கே.

நமக்கு எப்படி இந்த நம்பரெல்லாம் தெரியுமுன்னு கேட்கறீங்களா? அதான் கிரிக்கட் பாக்கும்போது பச்சாஸ் பூர கியான்னு கத்துவாங்களே அத வெச்சுதான். :)

அருள் குமார் said...

வாங்க கொத்ஸ்,
//அவன் ஹிந்தியில பேசறேன்னு சொல்லிப் பச்சீஸுக்கும் (25) பச்சாஸுக்கும் (50) வித்தியாசம் தெரியாம ஒரு கடையிலெ பேரம் பேசி, //

உண்மைய சொல்லுங்க, பேரம் பேசினது உங்க நண்பரா, நீங்களா? ஏன்னா நானும் பல மெட்டர்ல இப்படி நண்பர்களை உபயோகப்படுத்திக்கறது வழக்கம்! அதனாலதான் கண்டுபுடிக்க முடிஞ்சுது ;)

Anonymous said...

Very nice story narrated by you.

Regards,
Sanjeev (I.T 2004 batch CEC)

அருள் குமார் said...

//Very nice story narrated by you.// சஞ்சீவ், இது கதையல்ல. நிஜம்! :)

//Sanjeev (I.T 2004 batch CEC)//
அட..! நம்ம காலேஜ் :))

சுந்தர் / Sundar said...

நான் மட்டும் தனியே சிரிக்க
ஆபிஸில் மற்றவர்கள் என்னை பார்த்து சிரிக்க
இன்னக்கி வழிஞ்ச மாதிரி என்னிக்குமே வழியலீங்க!.

அருமை . அனுபவித்து படித்தேன் .

அருள் குமார் said...

நன்றி சுந்தர்.

என்னங்க திடீர்னு என் பதிவெல்லாம் தோண்டி தோண்டி படிச்சிட்டு இருக்கீங்க :)