என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

27 May 2006

பழைய ஓவியம் 1

ல்லூரிக் காலங்களில், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் "தொட்டால் தொடரும்" படித்து அவரின் தீவிர வாசகனாகிவிட்டேன். உண்மையில் அந்த நாவலைத் தொட்டால் முடியும்வரை தொடரும். பாதியில் வைக்க முடியாது. ஒவ்வொரு பாத்திரத்தின் குணாதிசயங்களையும் ஒளிந்திருந்து பார்த்ததுபோல் யதார்த்தமாய் எழுதியிருப்பர். கதையின் சம்பவங்கள் கூட வெகு இயல்பாய் நிகழ்வதுபோல் இருக்கும். முடிவு மட்டும் நமது தமிழ்சினிமாத்தனமாக இருக்கும்.

அப்போது ஆர்வக்கோளாரில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். கீழேயுள்ள படத்துன்! வரைந்த நினைவாக ஒரிஜினலை வைத்துக்கொண்டு அவருக்கு கலர் செராக்ஸ் எடுத்து அனுப்பினேன்.


புதிதாய் இப்போது எதுவும் வரைய நேரமில்லாவிட்டாலும், எனது பழைய ஓவியங்களை இங்கு ஒவ்வொன்றாக தொகுக்க முயற்சிக்கிறேன். உங்களுடன் பகிர்ந்துகொள்வதுடன், இவற்றை பத்திரமாக சேமித்ததுபோலவும் ஆகும் இல்லையா?!

18 மறுமொழிகள்:

அனுசுயா said...

கடந்த முறை சிவாஜி இப்போது ராஜேஷ்குமார் நன்றாக உள்ளது உங்கள் ஓவியதிறமை. பாராட்டுக்கள்.

சிங். செயகுமார். said...

படம் நல்லா வந்திருக்கு தல! ஒரு காலத்துல மாருதி மாதிரி வரைந்து அழகு பர்த்ததுண்டு. அதெல்லாம் எங்கே கிடக்கின்றதுன்னு தெரியல :)

துபாய் ராஜா said...

நன்றாகத்தான் வரைந்துள்ளீர்கள்.
ஓவியங்கள் தொடரட்டும்.
வாழ்த்த்க்கள்.

அருள் குமார் said...

நன்றி அனுசுயா. ஆனால் இது ராஜேஷ்குமார் அல்ல PKP. :(

தவறாக எழுதிவிட்டீர்களா இல்லை பார்க்க ராஜேஷ்குமார் மாதிரி இருக்கிறதா?

அருள் குமார் said...

நன்றி ஜெயக்குமார். நீங்கள் வரைந்தவற்றையும் தேடுங்கள். எனக்கும் வேறு எதையோ தேடப்போய்தான் சில பழைய ஓவியங்கள் கிடைத்தன. பல வருடங்களுக்குப்பின் இப்போது அவற்றை பார்க்க மிக வியப்பாய் இருக்கிறது. அந்த உணர்வை அனுபவிக்கவேனும் தேடுங்கள் :)

அருள் குமார் said...

மிக்க நன்றி ராஜா. கண்டிப்பாக தொடருகிறேன்.

லதா said...

தொட்டால் தொடரும் கதையைப்பற்றியும் ஓரு சிறு குறிப்பு வரைந்திருந்தால் நாங்களும் படித்திருக்கிறோமா இல்லை மறந்துவிட்டோமா என்பது தெரிந்திருக்கும்.

அருள் குமார் said...

சிறுகுறிப்புதானே?! வரைந்துவிட்டால் போகிறது...

சென்னைக்கு ஓடிவந்த காதலர் இருவர் நண்பர் வீட்டில் தங்குவார்கள். அவர்கள் அங்கு தங்கியிருக்கும் நாட்களில் அவர்களுக்குள் மனஸ்தாபங்கள் ஏற்ப்படும். அந்த காதலன் வசதிக்காக வேறு இரு பெண்ணை திருமணம் செய்ய முடிவுசெய்வார். இந்த வேதனையில் இருக்கும் அவளுக்கு, அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் மாடியில் இருக்கும் ஒரு இளைஞனுடன் நல்ல நட்பு ஏற்ப்படும். அவன் ஒரு ஓவியன். இப்படி போகும் அந்த கதை... படித்திருக்கிறீர்களா லதா?

குழலி / Kuzhali said...

அதெப்படி இந்த படம் முதலில் எனக்கு 'நிழல்கள்' ரவி மாதிரியும் பிறகு பி.கே.பி மாதிரியும் தெரிகிறது :-)

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் :-)

Radha N said...

நன்றாக வரைந்துள்ளீர்கள். ஆனாலும் பழசை அசைபோடுவது ஒரு சுகம் தான் இல்லையா.

அருள் குமார் said...

//அதெப்படி இந்த படம் முதலில் எனக்கு 'நிழல்கள்' ரவி மாதிரியும் பிறகு பி.கே.பி மாதிரியும் தெரிகிறது :-)//

அனு இதைப்பார்த்து ராஜேஷ்குமார் என்று சொல்லிவிட்டார்கள். ம்... அதற்கு இது எவ்வளவோ பரவாயில்ல!

அருள் குமார் said...

நன்றி நாகு. பழசை அசைபோடுவது சுகமா... பரமசுகம் நாகு.

RBGR said...

நல்ல முயற்சி ! தொடரட்டும்! காதலியின் டைரி படிப்பது போன்ற ஒரு சுகம்!!
நான் சொன்னது உங்கள் படைப்புகளை !?

அருள் குமார் said...

மிக்க நன்றி தமிழி.

//நான் சொன்னது உங்கள் படைப்புகளை !?// :)

லதா said...

// இப்படி போகும் அந்த கதை... படித்திருக்கிறீர்களா லதா? //

நன்றிகள் அருள் குமார். கதை நினைவிலிருக்கிறது. தலைப்பைத்தான் மறந்துவிட்டேன்.

உங்கள் குறிப்பைப் படித்தவுடன் குங்குமம் வார இதழில் வந்த மற்றொரு தொடர்கதை "பென்சில் மீசை" நினைவிற்கு வருகிறது. கிராமப்புறத்தில் பள்ளிப்படிப்பு முடித்து நகர்ப்புறக் கல்லூரியில் சேரும் இளைஞனைப் பற்றிய கதை அது.

ஒரு இளம் தம்பதியினரின் இல்லத்தில் பணமளி விருந்தினனாகத் (paying guest) தங்கி இருப்பான் அவன். வேறொரு பெண்ணிடம் கணவன் பழகுவது மனைவிக்குத் தெரிந்துவிடுகிறது. அந்தப் பிரச்சினை எப்படித் தீருகிறது என்று கலக்கியிருப்பார் ப கோ பி.

கவிதா | Kavitha said...

அருள், ரொம்ப நல்லா இருக்கு.. நீங்க அடிக்கடி இப்படி பதிவுகள் போடலாமே..நிறைய படம் வரைந்து வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே..?!!

அனுசுயா said...

அட ஒரு விளையாட்டிற்கு கூறினேன் உண்மையில் அருமையான ஒவியத்திறமை உங்களுடையது. பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகவே வரைந்துள்ளீர்கள்.
சென்ற முறை ஸ்மைலி போட மறந்துவிட்டேன். :)

அருள் குமார் said...

@ லதா:
ஆம் லதா. அந்த நாவலும் படித்திருக்கிறேன். அவரின் பல நாவல்கள் ஆர்வமான நடை கொண்டவை.

@ கவிதா:
நன்றி கவிதா. நான் எப்போதோ வரைந்த சில ஓவியங்கள் இப்போது வீடு மாற்றும் போது கிடைத்தன. அவ்வப்போது அவற்றை இங்கு பதிக்கிறேன்.

@ அனுசுயா:
நன்றி அனுசுயா :)