என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

29 June 2005

பூங்கோதை

பூங்கோதையின் மதிய நேரத்துக் குட்டித்தூக்கம் கலைந்தபோது மணி நாலேகால். ஐந்து மணிக்குத் தண்ணீர் பிடிக்கச் செல்லவேண்டுமென மூளை அனிச்சையாய் உணர்த்த, உடைதிருத்தி எழுந்தாள். பின்கட்டுக்குச் சென்று குவளையில் இருந்த நீர் எடுத்து முகத்தில் அடித்து அலம்பியபோது உடம்பு சிலிர்த்தது. இது பூங்கோதைக்கு ரொம்பப் பிடித்த விஷயம். நன்றாய் தூங்கியெழுந்து குளிர்ந்த நீரில் முகம் கழுவியவுடன், முகத்தில் ஒரு தெளிவு படரும். உலகத்திற்கு...
Read More

அறிமுகம்

கைகுலுக்கிபெயர் சொல்லிபுதிதாய் அறிமுகமாகிறஎவரின் பெயரும்உடனே நினைவில்பதிவதில்லை எனக்கு.சந்திப்பின் முடிவில்மன்னிக்கச் சொல்லிமறுபடி பெயர் கேட்டுமனதில் பதிப்பேன்.நீ எனக்குஅறிமுகமானதும்அப்படித்தன்.அதன்பின்புதுப்படம் பார்த்து - அதைபிய்த்து அலசிய பொழுதுகள்;புது நாவல் படித்துஅதற்குபுது முடிவு தேடிய பொழுதுகள்;சமூகச் சமுத்திரத்தைசர்ச்சை வலை போட்டுசலித்தெடுத்த பொழுதுகள்;நான் நினைத்ததை நீயும்நீ நினைத்ததை நானும்பேச்சிலும்பார்வையிலும்அசைவிலும்உணர்ந்தஉணர்த்திய...
Read More

24 June 2005

மனசுக்குள்...

நித்தம் நிழலாய்அவனின் தொடரல்காவியமாய் நினைத்தெழுதும்கிறுக்குத்தனமான கவிதைகள்பண்டிகைகளுக்காய் காத்திருந்து தரும்வாழ்த்து அட்டைகள்பிறந்தநாளன்று வரும்பிடிக்காத பரிசுப்பொருள்இவையனைத்தும் அவனில்எனக்கு எரிச்சலூட்டினாலும்ஒருவனை கவர்ந்துவிட்டகர்வம் தரும்மனசுக்குள் ஒருமெளனமான பூரிப்பு....
Read More