கைகுலுக்கி
பெயர் சொல்லி
புதிதாய் அறிமுகமாகிற
எவரின் பெயரும்
உடனே நினைவில்
பதிவதில்லை எனக்கு.
சந்திப்பின் முடிவில்
மன்னிக்கச் சொல்லி
மறுபடி பெயர் கேட்டு
மனதில் பதிப்பேன்.
நீ எனக்கு
அறிமுகமானதும்
அப்படித்தன்.
அதன்பின்
புதுப்படம் பார்த்து - அதை
பிய்த்து அலசிய பொழுதுகள்;
புது நாவல் படித்து
அதற்கு
புது முடிவு தேடிய பொழுதுகள்;
சமூகச் சமுத்திரத்தை
சர்ச்சை வலை போட்டு
சலித்தெடுத்த பொழுதுகள்;
நான் நினைத்ததை நீயும்
நீ நினைத்ததை நானும்
பேச்சிலும்
பார்வையிலும்
அசைவிலும்
உணர்ந்த
உணர்த்திய பொழுதுகள்...
இப்படி
நம் எண்ணங்களின்
அலைவரிசை
ஒன்றெனச்சொல்லிய
அற்புத பொழுதுகளில்
நீ
என்னுள் நுழைந்த
பொழுது எது?
5 மறுமொழிகள்:
நீ எனக்கு
அறிமுகமானதும்
அப்படித்தன்.
*****************
கவிதையை இத்தோடு நிறுத்தியிருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும்
வாங்க வாங்க
என் உணர்வுகளுக்கு மதிப்பளித்த கணேஷ், குழலி, சக்தி இவர்களுக்கு என் நன்றி.
நன்றாக இருக்கிறது கவிதை.
நன்றி சத்தியா.
Post a Comment