என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

17 March 2006

யார் இவர்?

கல்லூரி நாட்களில் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை செம போர் அடித்து உட்கார்ந்திருந்தபோது ஒரு வாரப்பத்திரிக்கையில் கண்ட புகைப்படம் ரொம்ப expressive-வா இருக்கேன்னு impress ஆகி பண்ணிய pencil sketch இது. சென்ற ஞாயிற்றுக்கிழமை செம போர் அடித்ததால் time pass-க்காக என் பொக்கிஷங்களை கிளறும்போது கிடைத்தது. உங்கள விட்டா வேற யார் கிட்ட இதெல்லாம் share பண்ணிக்க முடியும்?! பாத்திட்டு இது யார்னு சொல்லுங்க.



கரெக்டா சொல்லிட்டிங்கன்னா நல்லா வரைஞ்சிருக்கேன்னு அர்த்தம்! இல்லன்னா இது எப்பயோ பண்ணதுதானே இப்பொ வரைஞ்சிருந்தா நல்லா பண்ணியிருப்போம்னு மனச தேத்திக்கறேன் :)

14 மறுமொழிகள்:

கண்ணன் said...

பராசக்தி சிவாஜின்னு நினைக்கிறேன். சரியா?

துளசி கோபால் said...

சிவாஜியேதான். இதுலே என்ன சந்தேகம்?

Muthu said...

அருள்,

படம் நல்லாவே வந்திருக்கு. போடு ஒரு + குத்து....

அருள் குமார் said...

நன்றி கண்ணன். பராசக்தி சிவாஜியேதான். ஆனா நினைக்கிறேனு சொன்னிங்களா... சரி சுமாரா வரைஞ்சிருக்கோம்னு நினைச்சிகிட்டேன்!

பரவால்ல துளசி கோபால் 'இதுல என்ன சந்தேகம்'-னு கேட்டு மானத்த காப்பாத்திட்டாங்க!

நன்றி துளசி கோபால் :)

அருள் குமார் said...

மிக்க நன்றி முத்து!

Anonymous said...

அருள்!

சிவாஜிதான்! சிவாஜியேதான்!
என்ன ஒன்னு ' ரத்தக்கண்ணீர் ' சிவாஜி :-))))))

ச்ச்ச்ச்ச்ச்சும்மா தமாசு தமாசு...... ஓரளவு , சுமாரா , நல்லாவே இருக்குங்க :-))))

தியாக்

சிவா said...

தெளிவா அழகா சிவாஜி கணேசன்னு தெரியுதே அருள்..ரொம்ப நல்ல வரையறீங்க.

அருள் குமார் said...

தியாக்,
உங்க மனசுல தோனின விமர்சனத்தை உண்மையா சொன்னீங்களே... thanks!

மிக்க நன்றி சிவா.

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா... ஒரு நல்ல ஓவியர் எழுத்தாளனாகிப்போனதில் எனக்கு வருத்தம் அருள்.
படம் வரைவதை தொடருங்கள். வாழ்த்துக்கள்.

அருள் குமார் said...

நன்றி பாலபாரதி!

இரண்டையும் தொடர்ந்து செய்யவேண்டும் என்றுதான் விருப்பப்படுகிறேன். இந்த வலைப்பூவினை ஆரம்பித்திராவிடில் அதற்கு வாய்ப்பே இருந்திருக்காது! இங்கு மற்றவர்களின் படைப்புகளை படிப்பதும், உங்களைப்போன்ற நண்பர்கள் பின்னூட்டம் மூலம் அளிக்கும் உர்ச்சாகமும் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. கண்டிப்பாக தொடருகிறேன் பாலபாரதி.

அனுசுயா said...

அருமையாக படம் காட்டுகிறீர்கள்.. என்ன படத்தில் கடைசி இரண்டு ரீல் கிழிஞ்சிருச்சு மத்தபடி படம் சூப்பர்.

அருள் குமார் said...

நன்றி அனுசுயா,
scan பண்ணும்போது நானும் யோசிச்சேன். ஆனா end card க்கு அப்புறம் இருக்கிற ரீல் தானே கிழிஞ்சிருக்குன்னு விட்டுட்டேன்!

கவிதா | Kavitha said...

சிவாஜி ன்னு சொல்லித்தான் தெரியுனுமா என்ன?.. நல்லா வரையறீங்கப்பா..

siva said...

hai..............அருள் குமார்

படம் நல்லாதான் இருக்கு.ஆனா என்ன ஒரு படத்துல கருணாஸ் பல டிசைனில் முடி வெட்டுவாருள்ள அது மாதிரி இந்த சிவாசி குருதிபுனல் கமல்கணக்க இருக்காரு.........