கங்கைகொண்டசோழபுரம் கோயிலை பார்க்கும்போது, கருங்கற் பூக்கள் விளைந்த ஒரு சோலை போலத்தான் இருக்கும். ஏனோ தெரியவில்லை, இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலைவிட, அவரின் மகன் இராஜேந்திர சோழன் கட்டிய இந்த கோயிலை மிகவும் பிடித்துவிட்டது!
இந்த புகைப்படங்களை எடுக்கச்சென்றபோது மத்தியில் இருக்கும் பெரிய கோபுரத்தில் வேலைப்பாடுகள் நடந்துகொண்டிருந்ததால் சாரம் கட்டி மறைத்திருந்தார்கள். அந்த பிரம்மாண்டம் நீங்கலாக மற்றவை...
இக்கோயில் பற்றி மேலும் சில தகவல்கள்.
16 மறுமொழிகள்:
எனக்கும் இந்தக் கோவிலை மிகவும் பிடிக்கும். படங்களுக்கு நன்றி.
நன்றி
படங்கள் நன்று, தகவல் சுட்டிக்கும் நன்றி!
மறுமொழியிட்ட அனைவர்க்கும் நன்றி!
மிக அருமையான புகைப்படங்கள். நன்றி இதே போல தாராசுரமும் மிகவும் நன்றாக உள்ளது. முடிந்தால் அதையும் வலையேற்றுங்கள்.
நன்றி அனு. தாராசுரம் செல்லவேண்டும் என நீண்ட நாட்களாக ஆவல் கொண்டிருக்கிறேன். நேரம்தான் வாய்க்கவில்லை!
நேரில் பார்த்திராக் குறைய நீக்கினீர், நன்றிகள்!
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஜீவா!
நட்புடன்,
அருள்.
அருள்குமார்,
அருமையான படங்கள்... உண்மையில் இந்தக் கோவில் நேரில் பார்க்கும் போது இன்னும் வெகுஅழகானது.
அந்த நடராஜர் சிலை பிரம்மாண்டமாக அதே சமயம் வெகு கச்சிதமாக இருக்குமே... அதை நீங்கள் புகைப்படமெடுக்கவில்லையா..!? கல்லின் கவிதைகள் அவை. மீண்டும் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்
சுகா
படங்கள் அருமை.
கட்டுரை மேலும் விரிவாக அமைந்திருக்குமானால், அத்தலத்தினை நேரில் காணமுடியாதவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்குமே.
@ சுகா:
அந்த நடராஜர் சிலை உட்பட 2 ரோல் எடுத்தென் சுகா. அவற்றில் ஓரளவிற்கு எனக்கு திருப்தியளித்தவைகளை மட்டுமெ இங்கு பதித்தேன். இப்போதுதானே கற்றுக்கொள்கிறேன். அதனால் நிரைய படங்கள் நான் நினைத்ததுபோல் வரவில்லை! உங்கள் பதிவில் உங்கள் ஓவியங்கள் பார்த்தேன். மிக அருமை. வெகு நாட்களாக எதுவும் வரையவில்லையே. விட்டுவிடாமல் தொடருங்கள் சுகா.
@சிட்டுக்குருவி:
ஆமங்க. நான் எடுத்ததுதான். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி :)
@நாகு:
நன்றி நாகு. நீங்கள் சொன்ன பிறகுதான் யோசிக்கிறேன், ஒரு கட்டுரையாக எழுதியிருக்கலமே என்று. புகைப்படங்களை பதிப்பிக்கும் ஆர்வத்தில் விட்டுவிட்டேன். :(
எனக்கும் புகைப்படங்கள் பிடித்தது!
ஆயினும் இதன் வரலாற்றினைப் படித்தாதால் இதன் பின் உள்ள கர்வம் தான் தெரிகிறதே தவிர! வேறொன்றுமில்லை!
இருப்பினும் பதிவுகள் தொடரட்டும்! வாழ்த்துகள்!
நன்றி தமிழி.
இத்தகைய கலைப்படைப்புகளுக்குப் பின்னால் கர்வமிருப்பதில் ஒன்றும் தவறில்லை என்பது என் எண்ணம்!
நான் சொன்ன கர்வம் ....கலைப்படைப்பைப் பற்றியல்ல!!
இராஜ ராஜ சோழன் அவர்களின் பெரிய கோவிலின் வெளிப்பாடு, அவரது ஆன்மிக ஈடுபாட்டால் படைக்கப்பட்டது.
ஆனால், கங்கைகொண்டசோழபுரம் அவரின் மகன் இராஜேந்திர சோழன், தஞ்சை கோவிலை விட எனது சிறந்தது ! எனது எண்ண்ம் சிறந்தது ! நான் பெரியவன் என்பது போன்ற ஓர் முகிழ்வு(மகிழ்ச்சி தரும் முயற்சியை இப்படிக் கூறலாமா?அல்லது முளைத்தது என கொள்ளலாமா?).
ஆயினும் ,ஏதாகினும் ,நானும் மகிழ்வாய் வணங்குகிறேன்..படைப்பின் பெருமை காலத்தினை கடந்து நிற்பதாலோ!
//நான் சொன்ன கர்வம் ....கலைப்படைப்பைப் பற்றியல்ல!!// - மன்னியுங்கள் தமிழி. நான் தவறாக புரிந்துகொண்டேன்.
நன்றி அருள்..
இப்போது தான் படம் வரைய ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.. இனி தொடர முயல்வேன்.
Post a Comment