என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

27 May 2006

பழைய ஓவியம் 1

கல்லூரிக் காலங்களில், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் "தொட்டால் தொடரும்" படித்து அவரின் தீவிர வாசகனாகிவிட்டேன். உண்மையில் அந்த நாவலைத் தொட்டால் முடியும்வரை தொடரும். பாதியில் வைக்க முடியாது. ஒவ்வொரு பாத்திரத்தின் குணாதிசயங்களையும் ஒளிந்திருந்து பார்த்ததுபோல் யதார்த்தமாய் எழுதியிருப்பர். கதையின் சம்பவங்கள் கூட வெகு இயல்பாய் நிகழ்வதுபோல் இருக்கும். முடிவு மட்டும் நமது தமிழ்சினிமாத்தனமாக இருக்கும்.அப்போது...
Read More

17 May 2006

கடிதங்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 2: கடிதங்கள்சில வருடங்களுக்கு முன்பு எனது வாழ்தலின் அத்தியாவசியங்களுள் ஒன்றாக விளங்கிய கடிதங்கள், இன்று வெறும் நினைவுச்சுவடுகளாக மட்டுமே எஞ்சியிருக்கிறது. கடிதங்கள் என் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகப்பெரியவை. அப்படியிருந்த கடிதங்களை இன்று சுத்தமாக மறந்தே போய்விட்டது மிக ஆச்சர்யமாய் இருக்கிறது!நேற்று என் நண்பன், தனது திருமண அழைப்பிதழ்களை அனுப்புவதற்காக, அருகில் தபால்...
Read More

02 May 2006

இலக்கற்ற பயணங்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 1: இலக்கற்ற பயணங்கள்சின்ன வயதிலிருந்தே எங்கும் எதிலும் இலக்குகள் வேண்டும் என்றே போதிக்கப்பட்டதாலோ என்னவோ, இலக்கற்ற பயணங்களின் சுவை உணர வாழ்வின் பெரும்பகுதி கடக்கவேண்டியிருந்தது. இலக்கில்லாமல் திரிதல் சுகம். இத்தனை மணிக்கு இன்னாரை பார்க்கவேண்டும் அல்லது இதைச்செய்யவேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல் பயணிப்பதின் சுகம் அதை அனுபவித்தவர்க்கே தெரியும்.+2 நாட்களில் நண்பன் புருஷோத்தமனுடன்...
Read More