என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

27 June 2006

சில புரிதல்கள்

எதிர்பாராமல் இன்று
உன் குழந்தைகளுடன்
நீ எதிர்ப்பட்ட சந்திப்பில்

வெறுமையாய்ப் புன்னகைத்து
பரஸ்பரம் குடும்பநலம்
விசாரித்துக் கொள்ளமுடிகிற
நம் உள்ளங்கள்
மாறிமாறிச் சொல்லியிருக்கின்றன-

"நீ இல்லாத
ஒரு வாழ்க்கையை
நினைச்சு கூட
பாக்க முடிலடா..."

யார் இல்லாவிட்டாலும்
யாரும் வாழமுடியுமென
கடந்த சில வருடங்களில்
மெளனமாய்
சொல்லிக் கொடுத்திருக்கிறது
காலம்!

44 மறுமொழிகள்:

Unknown said...

வெறுமையாய்ப் புன்னகைத்து
பரஸ்பரம் குடும்பநலம்
விசாரித்துக் கொள்ளமுடிகிற
நம் உள்ளங்கள்
மாறிமாறிச் சொல்லியிருக்கின்றன-

Anonymous said...

Excellent. Still I am waiting for that day to come to meet **** unexpectedly. :(

அருள் குமார் said...

@ அருட்பெருங்கோ:

//வெறுமையாய்ப் புன்னகைத்து//
மன்னியுங்கள், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனத்தெரியவில்லை!

@ Anonymous:
நன்றிங்க. எதிர்பாராமல் நடைபெறவேண்டிய ஒன்றுக்காக காத்திருக்கிறீர்களா?! முரணாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது :)

Anonymous said...

Yes Arul, I am still waiting for that day to come to sooth me. So that atlease I come to know how **** is now. Life is very painful and I belive TIME is the only medicine for that.

Unknown said...

அருள்,

அந்தப் புன்னகை இயல்பாய் இருப்பதற்கு மாறாய் வெறுமையாய்ப் போனது ஏன்?

Anonymous said...

Its highly impossible to smile 'இயல்பாய்'.

அருள் குமார் said...

@ Anonymous:
உங்களுக்கு அப்படியொரு நிகழ வாழ்த்துக்கள்

@ அருட்பெருங்கோ:
பிரிந்து வாழவேமுடியாது என்று நினைத்தவர்கள் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம், சந்திக்கும்போது இயல்பாய் புன்னகைக்கமுடியாத அளவிற்காவது வருத்தப்படமாட்டார்களா? ஒருவேலை இன்னும் காலம் கடந்தால் நீங்கள் சொல்வதும் நிகழலாம்! எல்லாவற்றிற்க்கும் ஒரு தீர்வு வைத்திருக்கிறது காலம் :)

Chellamuthu Kuppusamy said...

//யார் இல்லாவிட்டாலும்
யாரும் வாழமுடியுமென//

There you go!!

அருள் குமார் said...

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி குப்புசாமி :)

நாகை சிவா said...

////யார் இல்லாவிட்டாலும்
யாரும் வாழமுடியுமென//
சத்தியமான உண்மை. அவள் இல்லாமல் வாழவே முடியாது என்று கூறம் என் நண்பர்க்களிடம் இந்த வார்த்தையை நான் அடிக்கடிக் கூறுவேன்.

நல்லா இருக்கு அருள்!

அருள் குமார் said...

நன்றி சிவா.

//அவள் இல்லாமல் வாழவே முடியாது என்று கூறம் என் நண்பர்க்களிடம் இந்த வார்த்தையை நான் அடிக்கடிக் கூறுவேன்.// நானும்... :)

Anonymous said...

Arul,

manadhai thotta nalla kavidhaikku nandrigal pala......

kumar

We The People said...

அருள்,

//யார் இல்லாவிட்டாலும்
யாரும் வாழமுடியுமென//

nobody is Indispensable என்ற கருத்தை அழகாகவும் வித்தியாசமாகவும் உணர்த்தியிருக்கீங்க.

வெரி குட்.

நட்புடன்,

ஜெயசங்கர்

கவிதா | Kavitha said...

"நீ இல்லாத
ஒரு வாழ்க்கையை
நினைச்சு கூட
பாக்க முடிலடா..."

யார் இல்லாவிட்டாலும்
யாரும் வாழமுடியுமென
கடந்த சில வருடங்களில்
மெளனமாய்
சொல்லிக் கொடுத்திருக்கிறது
காலம்!//

வாழமுடியும் அருள், ஆனா.. அதன் வலி அவர்களுக்கு மட்டுமே தெரியும்.. வலியுடன் சிரிப்பவர்கள் பல பேர் என்ன செய்வது அது தான் வாழ்க்கை..

அருள் குமார் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி குமார்.

நன்றி ஜெய்ஷங்கர் :)

அருள் குமார் said...

//அதன் வலி அவர்களுக்கு மட்டுமே தெரியும்..//

ஆம் கவிதா. அதனால் தான் வெறுமையாய்ப் புன்னகைக்கிறார்கள். ஆனாலும் அழுகையை வெறுமையான புன்னகைக்கு கொண்டுவந்த காலத்திற்கு, வெறுமையான புன்னகையை இயல்பான புன்னகையாக மாற்ற மேலும் சில/பல வருடங்கள் தேவைப்படலாம். அவ்வளவே :)

கவிதா | Kavitha said...

//வெறுமையான புன்னகையை இயல்பான புன்னகையாக மாற்ற மேலும் சில/பல வருடங்கள் தேவைப்படலாம். அவ்வளவே :) //

திரும்பவும் இயல்பாக இருக்கிற மாதிரி தான் இருக்கும் அருள், ஆனால் இந்த வலி வாழ்நாள் முழுதும் தொடரும் என்பதே உண்மை...

நவீன் ப்ரகாஷ் said...

//"நீ இல்லாத
ஒரு வாழ்க்கையை
நினைச்சு கூட
பாக்க முடிலடா..."//


அருள் மிக அழகாய் இயல்பாய் ஒரு கவிதை !

அழும்போது கூட அழகாய் இருக்கிறதல்லவா உணர்வுகள் ?! மிகவும் ரசித்தேன் !

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
யார் இல்லாவிட்டாலும்
யாரும் வாழமுடியுமென
///

யார் இல்லாவிட்டாலும் யாரும் வாழ முடியும் வாழ்க்கை வாழ்ந்த திருப்தி கிடைக்குமா அந்த யார் இல்லையெனில்?

Anonymous said...

Kavitha, you are absolutely correct. The pain will remain for ever.

Sivabalan said...

//மெளனமாய்
சொல்லிக் கொடுத்திருக்கிறது
காலம்!//

அருமை.


நன்றி.

அருள் குமார் said...

கவிதா,

//ஆனால் இந்த வலி வாழ்நாள் முழுதும் தொடரும் என்பதே உண்மை... //

தொடரும் என்பது சரிதான். ஆனால் குறைந்துகொண்டேதான் வருகிறது என்பதை மறுக்க முடியாதல்லவா. அதை மறக்கவே முடியாத மனம் பின் அவ்வப்போது நினைத்து வருந்துவதும், சில காலங்களுக்குப் பின் எப்போதாவது நினைத்து வருந்துவதும் நிகழத்தானே செய்கிறது!

வாழ்க்கை புரிந்தபின், ஒரு வயதில்,நிறைவேறாத காதலை எண்ணி வருந்துவதை விட, பசுமையாய் நினைவு கூர்ந்து இனிமை காண்பார்கள் என்றும் கேள்வியுற்றிருக்கிறேன்!

அருள் குமார் said...

நன்றி நவீன்.

நன்றி சிவபாலன்.

அருள் குமார் said...

//யார் இல்லாவிட்டாலும் யாரும் வாழ முடியும் வாழ்க்கை வாழ்ந்த திருப்தி கிடைக்குமா அந்த யார் இல்லையெனில்? //

எந்த விதத்திலும் யாரும் முழுமையாய் திருப்தி அடைந்து விடுவதில்லையே குமரன்.

நான் சொல்ல வருவது என்னவென்றால் - 'நீயின்றி வாழவே முடியாது' என்று சொல்வது, சொன்ன பொழுதுகளில் 100% நிஜம் தான் எனினும், அவர்கள் இல்லாமலும் வாழ்ந்துவிட காலம் கற்றுக்கொடுக்கிறது என்பதைத்தான் :)

காதல் நிறைவேறாவிட்டால் வாழ்க்கையே இல்லை எனில், இன்று உலகில் எத்தனை பேர் இருப்பார்கள் குமரன்?!

அருள் குமார் said...

அனானி,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

கவிதா அவர்களுக்குச் சொல்லியிருப்பதில் உங்களுக்கான பதிலும் இருக்கிறது.

//The pain will remain for ever.//
சரிதான் என்றாலும், முதல் நாள் இருக்கும் வலி கடைசிவரையிலும் அப்படியேவா இருக்கிறது?!

முத்துகுமரன் said...

இயல்பாய் வந்துவிடும் வலியின் சுவடுகளை அழகாகச் சொன்ன கவிதை. இதே போன்றதொரு உணர்வில் நான்
எழுதிய கவிதை.

கனவில் நீ வந்ததைப் பற்றி
எழுத நினைத்து நினைத்து
தாமதமாகிக்கொண்டே போகிறது.
உன் வருகை
என்னை அழுத்தவில்லை
அழ வைக்கவும் இல்லை.
நெருடலில்லாது
சிரிக்கவும் பழகிவிட்டோம்
ஆனால்
அதைச் சொல்லும் போதுமட்டும்
ஏதோ ஒரு
மெல்லிய சுமையேறியது போல்
கனக்கிறதென் மனம்.

கவிதையின் வீச்சு வலியுள்ளவர்களுக்கு சொல்லாமலே புரிந்துவிடும் :-)

பொன்ஸ்~~Poorna said...

//சரிதான் என்றாலும், முதல் நாள் இருக்கும் வலி கடைசிவரையிலும் அப்படியேவா இருக்கிறது?! //
அருள், இதெல்லாம் அனுபவிக்காம பேசிட முடியும்ங்கிறீங்களா?

கவிதை as it is நல்லா இருக்கு.. அந்தக் கணத்தின் வெறுமையை மறுக்க முடியாது..

(போட்டோ மறுபடி மாத்தியாச்சா!! )

அருள் குமார் said...

@ முத்துக்குமரன்:

நன்றி முத்துக்குமரன். நீங்கள் சொல்லியிருக்கும் கவிதை இன்னும் அழகாக இருக்கிறது.

@பொன்ஸ்:

நன்றி பொன்ஸ்.

//அருள், இதெல்லாம் அனுபவிக்காம பேசிட முடியும்ங்கிறீங்களா? // அனுபவிக்கலன்னு யார் சொன்னது ;)
என்பக்கமோ அல்லது எதிர்ப்பக்கமோ, எனக்கு வாய்த்ததெல்லாம் ஒருதலைக் காதல்தான் என்றாலும் அப்போது இருந்த வலி நிஜம்தானே!

அத்துடன், அடுத்தவர்கள் அனுபவமும் நமக்குப் புரியாமல் இல்லையே! நம் நெருங்கிய வட்டத்திலேயே எத்தனை பேர் 'நீயின்றி நானில்லை' என்று காதலித்தும் இப்போது தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது தவறென்று சொல்லவில்லை. அப்படி வாழ்வதற்கான சூழலை காலம் தருகிறது என்கிறேன்.

//(போட்டோ மறுபடி மாத்தியாச்சா!! ) // ஆமாங்க :)

மாற்றம் ஒன்னுதானே மாறாம இருக்கறது! :)

பொன்ஸ்~~Poorna said...

//அதைச் சொல்லும் போதுமட்டும்
ஏதோ ஒரு
மெல்லிய சுமையேறியது போல்
கனக்கிறதென் மனம்.//
நல்லா இருக்கு முத்துகுமரன்.. உங்க மற்ற கவிதைகள் போலவே...

Anonymous said...

//யார் இல்லாவிட்டாலும்
யாரும் வாழமுடியுமென
கடந்த சில வருடங்களில்
மெளனமாய்
சொல்லிக் கொடுத்திருக்கிறது
காலம்!//

இதை எனக்கே சொல்லிகொள்கிறேன்.. கடைசிவரை நம்மோடு இருப்பது நாம் மட்டும் தான்.. ஆனால் கடவுள் சில சமயம்..பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை குடுத்து மீண்டும் பரித்துகொள்கிறார்...
ஒரு வேலை அதுலேயும் ஒரு அர்த்தம் இருக்குமோ என்னமோ
anyway...யதார்த்தமான,,கவிதை...
பாராட்டுக்கள்

அருள் குமார் said...

நன்றி அனானி :)

அருள் குமார் said...

//But dont go away for long, as they learned to live without u//

இதாங்க நிஜம் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா வந்துருக்கு கவிதை.பிரிந்தவர்கள் இப்படி ஒருமுறையேனும் கண்டிப்பாய் சந்திக்கவேண்டும்.
நான் எழுதிய கவிதை போலவே நீங்கள் முன்பே எழுதிய இக்கவிதையின் சுட்டியை பொன்ஸ் தந்தார்கள்.

அருள் குமார் said...

நன்றி முத்துலட்சுமி!

பொன்ஸ் எப்போதும் நல்ல இடுகைகளைத்தான் பரிந்துரைப்பார்கள். இதை நல்ல கவிதை என்று சொல்லாமல் சொல்லிய பொன்ஸூக்கும் நன்றி ;)

Anonymous said...

yes i agree
yar illavitalum
yarum vazha mudium
but
வாழ்க்கை வாழலாம்
வாழ்கின்ற வாழ்க்கையை
அனுபவிக்க முடியாது.

சென்ஷி said...

என் மனதிலும் வலி.. அழகான பிரதிபலிப்பு

சென்ஷி

ப்ரியன் said...

அருமை அருள்

நந்தா said...

/யார் இல்லாவிட்டாலும்
யாரும் வாழமுடியுமென
கடந்த சில வருடங்களில்
மெளனமாய்
சொல்லிக் கொடுத்திருக்கிறது
காலம்!/

உங்களின் ஒட்டு மொத்த கவிதையை விட இந்த 6 வரிகள் ஏற்படுத்திய பாதிப்பு ஏராளம். அதற்காக கவிதை சுமார் தான் என்று அர்த்தம் இல்லை.

கவிதை பிடித்திருக்கிறது. வரிகள் பாதித்திருக்கிறது.

பொன்ஸ்~~Poorna said...

எப்படித் திடீர்னு முழிச்சிகிச்சு? எப்படியோ.. நாற்பதாவது கமெண்ட் போட்டு நானே கீழ தள்ளிடறேன் :)

சென்ஷி said...

//எப்படித் திடீர்னு முழிச்சிகிச்சு? எப்படியோ.. நாற்பதாவது கமெண்ட் போட்டு நானே கீழ தள்ளிடறேன் :) //

எவ்ளோ நல்ல மனசுங்க உங்களுக்கு:(

ஆனா தெரியுமா 40க்கு வெளியே போகாது. 41போடணும்.

அத நான் கரீக்டா செஞ்சுட்டேன் :)

சென்ஷி

அருள் குமார் said...

//எவ்ளோ நல்ல மனசுங்க உங்களுக்கு:(//

இத நீங்க சொல்றீங்களா சென்ஷி?

வெளில போய்டுச்சிங்க... இப்போ சந்தோஷமா உங்க ரெண்டு பேருக்கும்?

ஆமா... எங்க போனாரு இந்த பாலா? அவர் இல்லாததால மத்தவங்க உங்ககிட்ட இப்படி மாட்டிக்கிராங்களே! :(

surya said...

superbbbbbbbbbbbbbbbbb
i am also eagerly waiting for such an unexpected meet.

KALAM.....
ninaivugalin mel padium thoosi mathiri.
marakka vaikkum
maraithu vaikkum
ninaikka neram illamal oda vaikkum
aanal
yethaium maatha mudiyathu.

kalathin chuvadukalai
thoosi thatti parthal
manam thoosi aagum

அருள் குமார் said...

நன்றி சூர்யா!

சென்ஷி said...

//S. அருள் குமார் said...
//எவ்ளோ நல்ல மனசுங்க உங்களுக்கு:(//

இத நீங்க சொல்றீங்களா சென்ஷி?

வெளில போய்டுச்சிங்க... இப்போ சந்தோஷமா உங்க ரெண்டு பேருக்கும்?

ஆமா... எங்க போனாரு இந்த பாலா? அவர் இல்லாததால மத்தவங்க உங்ககிட்ட இப்படி மாட்டிக்கிராங்களே! :(//

மறுபடி மேல வரவைச்சுட்டாப்போச்சு :)

சென்ஷி