என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

28 September 2006

இருத்தலின் சாத்தியங்கள்

அரும்பிக்கொண்டே இருக்கின்றனமொட்டுகள்-புதிது புதிதாய்மலர்ந்த சிலவும்வாடத்துவங்கும்மலர்ந்த நொடியிலிருந்தேமலரும் வாய்ப்பும்வாடும் நிதர்சனமும்அறிந்தே அரும்பும்புதிய மொட்டுகள்-ஆதி அரும்பின் பரவசத்திற்குசற்றும் குறையாத பூரிப்புடன்!பூங்கா அக்டோபர் 02, 2006 இதழில் இக்கவிதை தொகுக்கப்பட்டுள்ள...
Read More

21 September 2006

காணக்கிடைக்கும் தெய்வங்கள்

வாழ்வில் அலுக்கவே அலுக்காத விஷயங்கள் என்று ஒவ்வொருவருக்கும் சின்னதாகவாவது ஒரு பட்டியல் இருக்கும். என்னுடைய அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, குழந்தைகளும் அவர்களின் குறும்புகளும்!குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். நான் புரிந்துகொண்டவரை கடவுள் என்பது ஒரு நிலை. கண்ணில் படுகின்ற எதையும், அவற்றின் மீதான எந்த கற்பிதங்களும் அற்று, அவற்றை அவைகளாகவே பார்க்கும் பாக்கியம் அந்த நிலையில் மட்டுமே வாய்க்கும்....
Read More

13 September 2006

இழந்த கவிதைகள்...

எல்லோரைப் போலவேஎன்னிடமும் உண்டுசில கவிதைகள்உங்கள் ஊடகங்களுக்கானமொழியில் இல்லை அவைஅர்த்தங்கள் சிதையும்மொழிபெயர்ப்பிலும் சம்மதமில்லைஇருந்துவிட்டுப் போகட்டும்என் கவிதைகள்எனக்கும்என் உடன் சேர்ந்துஉணர்ந்தவர்களுக்கும்இடையில் மட்டுமே!பின்குறிப்பு: நண்பர்களின் விமர்சனங்களுக்குப் பின், சில திருத்தங்கள் செய்யப்பட்ட மீள்பதிவு. ம்..! எப்படியோ... என் வலைப்பதிவு வரலாற்றிலும் ஒரு மீள்பதிவு...
Read More

04 September 2006

பிடிபட்டவர்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 3: பிடிபட்டவர்கள்'விஸ்வநாதன் ராமமூர்த்தி' திரைப்படத்தில் விவேக் தன் மனைவியிடம் "யார் திருடன், சொல்லுபாப்போம்?" என்று கேட்பார். அதற்கு அவர் மனைவியின் பதில் - "திருடுறவன் தான் திருடன்!". இந்த கேள்விக்கான, நம் அனைவரின் பதிலும் கூட இதுவாகத்தான் இருக்கக்கூடும். ஆனால் இதை இல்லை என்று மறுத்துவிட்டு விவேக் பதில் சொல்வார்-"மாட்டிக்கிறவன் தான் திருடன்..!"அதைத் தொடர்ந்து வந்த நகைச்சுவைக்...
Read More