என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

03 July 2007

கூர்க் - தொடர்ச்சி...

கூர்கில் எங்களது இரண்டாம் நாள் மிக இனிதாக விடிந்தது. வழக்கம்போலில்லாமல் அன்று நேரத்திலேயே எழுந்துவிட்டோம் - மலைப்பிரதேசத்தின் விடியல் அழகை ரசிக்க. எங்குமே காலை வெய்யிலின் அழகே தனி. காடு மலைகளுக்கிடையே என்றால் கேட்கவேண்டுமா என்ன? சுத்தமான கற்றை சுவாசித்தபடி சின்னதாக ஒரு நடைபயணம். இன்றைக்கும் இங்கேயே இருந்துவிடலாமா இல்லை வேறு ஏதாவது பார்க்கச்செல்லலாமா என்று யோசித்தபடி நடந்தோம். நிம்மதியாக இங்கேயே...
Read More

28 June 2007

கூர்க் - இயற்கையின் கொண்டாட்டம்!

எல்லா வேலைகளையும் தூக்கிப்போட்டுவிட்டு ஒரு இரண்டு நாளைக்காவது எங்காவது போய் எந்த கமிட்மென்ட்டும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. இப்படியே யோசித்துக்கொண்டிருந்த சில நண்பர்களையும் அழைத்துக்கொண்டு சமீபத்தில் கர்னாடக மாநிலம், கூர்க்(coorg) சென்றுவந்தேன். பொதுவாக கூர்க் போகவேண்டுமென்றால் அங்குள்ள 'மடிகேரி' என்ற ஊருக்கு தான் வழிகாட்டுவார்கள் போலிருக்கிறது. இந்த மடிகேரியைச் சுற்றித்தான்...
Read More

08 June 2007

மொக்கை போட்டு நாளாச்சு! பதிவர் சந்திப்பு :)

வணக்கம் நண்பார்களே!நாம் சந்தித்து நாட்களாகிவிட்டன. இதோ.. மீண்டும் மொக்கை போட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் இரு பதிவர்கள். அவர்கள் தமிழகத்திற்கு வெளியே இருந்து வருகிறவர்கள். பதிவர்களை சந்திக்கவேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகிறார்கள். இது அரட்டைக் கச்சேரிக்கான சந்திப்பு.இச்சந்திப்பின் சிறப்பு விருந்தினர்கள்...டெல்லியிலிருந்து முத்துலெட்சுமிதுபாயிலிருந்து அபிஅப்பாஆர்வமிக்கவர்கள் படை எடுக்கவேண்டிய...
Read More

31 May 2007

லூசுப்பய!

சில மாதங்களுக்கு முன்பு ஆளாளுக்கு தங்கள் கிறுக்குத்தனங்களை எழுதிக்கொண்டிருந்தபோது நண்பர் மா. சிவகுமார் என்னையும் எழுத அழைத்திருந்தார். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அந்த அழைப்பை ஏற்று இன்று எழுதத்தான் வேண்டுமா என்றால், ஆம்!(வாக்கு கொடுத்துட்டோம்ல!) வெகுநாட்களாக வலைப்பதிவு பக்கம் வரமுடியாமல் இருந்துவிட்டு இப்போது மீண்டும் தொடர எத்தனிக்கையில், என்ன எழுதுவது என்று குழம்பிக்கொண்டிராமல், இந்த அழைப்பையே ஒரு...
Read More

14 February 2007

காதலைக் காப்பாற்றியவர்கள்

நீ என்னை மணந்தால் தன்னை மாய்த்துக்கொள்வதாய்ச் சொன்ன உன் அம்மா உன்னோடு வந்தால் இந்த வாசல் மிதிக்காதே என்று மிரட்டிய என் அப்பா என் தங்கைகள் வாழ்வு பற்றி திடீர் அக்கரை கொண்ட எங்கள் சுற்றம் உனது மற்றும் எனது சாதி சனம் திருமணம் தடுத்து காதலைக் காப்பற்றிய இவர்கள் அனைவர்க்கும் நம் காதல் சார்பாக மனமார்ந்த நன்றிகள...
Read More

07 February 2007

எங்க கிராமத்துல... 2

பொங்கலுக்கு ஊருக்குச் சென்றுவந்தபோது எடுத்த புகைப்படங்களில் சில... பேசாம எல்லாத்தையும் வுட்டுட்டு நிம்மதியா வெவசாயம் பாக்க வந்துடலாமான்னு தோணுது... மரமேறித்தான் எளநி பறிக்கணுமா என்ன? இந்த மரத்த நாங்க மொட்டையடிக்கல சாமீ... ரொம்ப வருசமா நாங்க இப்படியேத்தான் நின்னுகிட்டு இருக்கோம்! ஒத்தப் பன அதுல குருவிக்கூடு குட்டி தேக்கந்தோப...
Read More