என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

07 February 2007

எங்க கிராமத்துல... 2

பொங்கலுக்கு ஊருக்குச் சென்றுவந்தபோது எடுத்த புகைப்படங்களில் சில...

பேசாம எல்லாத்தையும் வுட்டுட்டு நிம்மதியா வெவசாயம் பாக்க வந்துடலாமான்னு தோணுது...

மரமேறித்தான் எளநி பறிக்கணுமா என்ன?


இந்த மரத்த நாங்க மொட்டையடிக்கல சாமீ... ரொம்ப வருசமா நாங்க இப்படியேத்தான் நின்னுகிட்டு இருக்கோம்!

ஒத்தப் பன


அதுல குருவிக்கூடு

குட்டி தேக்கந்தோப்பு

9 மறுமொழிகள்:

சென்ஷி said...

nice photos,

எனக்கும் எங்க ஊரு ஞாபகம் வந்துடுச்சு.

சென்ஷி

சுந்தர் / Sundar said...

படங்கள் அருமை... ஊரு பெரு சொலலையே!

அருள் குமார் said...

நன்றி சென்ஷி!

சுந்தர்,
ஊர் பெயர், வட்டம் மாவட்டம் எல்லாம் இதுக்கு முந்தின பதிவுல போட்டிர்ருக்கேன் பாருங்க :)

நற்கீரன் said...

நல்ல படங்கள். தமிழ்ச் சினிமாவில காட்டுற மாதிரி கிராமம் போல சாமி, வயல், வரம்பு, சிறு வீடுகள் என்று அழகாகவே. படங்களையும், உங்கள் ஊர் பற்றிய குறிப்பையும் த.வி. (தமிழ் விக்கிபீடியா) சேர்த்தாலும் நன்று. உங்கள் ஊர் பேரூர் ஒன்றுக்குள் வருகின்றதா. ஏன் என்றால் சுமார் 500 வரையிலான தமிழ்நாடு புள்ளியல் கணிப்பீட்டில் இருக்கும் தகவல்களை அடிப்படையாக வைத்து stub GanashK உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு உங்கள் ஊரை தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை.

எப்படியாகினும், நல்ல அழகான கிராமம்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அருள்குமார்,

அருமையான படங்கள்! படங்களின் ஒரிஜினல் அளவில் எனக்கு வேணுமே. முக்கிய்மாக அந்தப் பனைமரங்கள். மடலில் அனுப்ப முடியுமா? :)

-மதி

மாசிலா said...

வலைதளம் அழகு
நிழற்படங்களோ....
கொள்ளை அழகு!

வாழ்த்துக்கள்.

செல்வநாயகி said...

நல்ல படங்கள் அருள். கூடச் சேர்த்திருக்கிற வரிகளும்:))

சேதுக்கரசி said...

அழகான காட்சிகள்

அருள் குமார் said...

நன்றி நற்கீரன்,

// உங்கள் ஊர் பேரூர் ஒன்றுக்குள் வருகின்றதா. //

இல்லங்க... ரொம்ப சின்ன ஊர் அது.

நன்றி மதி,

நீங்கள் கேட்ட படங்களை அனுப்பிவைக்கிறேன்.

மாசிலா, செல்வநாயகி, சேதுக்கரசி ஆகியோர்க்கும் என் நன்றிகள்.