என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

28 September 2006

இருத்தலின் சாத்தியங்கள்





ரும்பிக்கொண்டே இருக்கின்றன
மொட்டுகள்-
புதிது புதிதாய்

மலர்ந்த சிலவும்
வாடத்துவங்கும்
மலர்ந்த நொடியிலிருந்தே

மலரும் வாய்ப்பும்
வாடும் நிதர்சனமும்
அறிந்தே அரும்பும்
புதிய மொட்டுகள்-
ஆதி அரும்பின் பரவசத்திற்கு
சற்றும் குறையாத பூரிப்புடன்!

பூங்கா அக்டோபர் 02, 2006 இதழில் இக்கவிதை தொகுக்கப்பட்டுள்ளது.

9 மறுமொழிகள்:

மா சிவகுமார் said...

அருள்,

இவ்வளவு உள்ளுணர்வை வைத்துக் கொண்டா கேள்விகளாக குவிக்கிறீர்கள்? அருமையான கவிதை. நான்கு வரிகளில் நாற்பது பக்க விஷயத்தைச் சொல்லி விட்டீர்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna said...

மலரும் புதிய மொட்டுக்களுக்கு மலரும் வாய்ப்பும், வாடும் நிதர்சனமும் இரண்டும் புரியுமா அருள்?

படம் அழகு...

அருள் குமார் said...

நன்றி சிவகுமார்.

பொன்ஸ்,
மலரும் வாய்ப்பும், வாடும் நிதர்சனமும் செடிகளுக்குத் தெரிந்திருக்கும் என்றே நான் பொருள் கொண்டேன். ரொம்பவும் விரிவாக சொன்னால் உரைநடை மாதிரி ஆகிவிடுகிறது! :( "இப்ப மட்டும் என்ன வாழுதாம்" என்கிறீர்களா? :)

கீழ்காணும் பொருளில் இதைப்பார்க்கலாம்:

நம்மில் தினம் தினம் உற்சாகமாய் பூத்துக்கொண்டே இருக்கின்றன ஆசைகள். நிறைவேறுபவை சிலவே. அவையும் போகப்போக அலுத்துப்போவதை நாம் அறிந்தே இருந்தாலும், தினம் தினம் அதே உற்சாகத்துடன் பூத்துக்கொண்டே இருக்கின்றன ஆசைகள் புதிது புதிதாய்! இந்த அதிசயம்தானே நம் இருத்தலுக்கான சாத்தியமாக இருக்கிறது?!

சிவகுமார் சொன்ன,
//இவ்வளவு உள்ளுணர்வை வைத்துக் கொண்டா கேள்விகளாக குவிக்கிறீர்கள்? // இந்த விஷயம் கூட இதற்குப் பொருந்தும்!

ஹூம்... நானும் விளக்கம் சொல்றேனே... அதுவும் உங்களுக்கு!

பொன்ஸ்~~Poorna said...

என்ன சொல்ல வருகிறீங்க என்று சுலபமாகப் புரிந்துவிட்டது. ஆனால் அரும்புகள், பூ என்னும் உதாரணம் தான் எனக்குச் சரியாகத் தோன்றவில்லை.. வேறு ஏதாவது...

//நானும் விளக்கம் சொல்றேனே... அதுவும் உங்களுக்கு! //
உள்குத்து... உள்குத்து!! :)))

அருள் குமார் said...

//வேறு ஏதாவது... // சொல்லத் தெரிந்திருந்தால்தான் பெரிய கவிஞன் ஆகியிருப்பேனே :(

நானே ஏதோ படத்தப்போட்டு ஒப்பேத்திகிட்டு இருக்கேன்.. நீங்க வேற... :)

tamizhppiriyan said...

வணக்கம். த‌ங்க‌ள் 'இருத்த‌லின் சாத்திய‌ங்க‌ள்' கவிதை ப‌டித்தேன்..
அருமையான வ‌ரிகள்! சுருக்க‌மாக சொல்லி இருப்பினும்,க‌ருத்தாழ‌ம்
உங்களிடம் ஏராள‌ம்..வாழ்த்துக்க‌ள்!
நன்றி.

அருள் குமார் said...

மிக்க நன்றி தமிழ்ப்பிரியன்.

வீரமணி said...

குமார் நல்ல வரிகள்..
பழைய ஞானக்கூத்தனுக்கு
சமமான கவிதை.......
தொடர்ந்து எழுது.....
மிரட்டலான
கவிதை.......

நிறைய அன்புடன்
வீரமணி

அருள் குமார் said...

உற்சாகமளிக்கும் உன் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி வீரமணி.