எல்லோரைப் போலவே
என்னிடமும் உண்டு
சில கவிதைகள்
உங்கள் ஊடகங்களுக்கான
மொழியில் இல்லை அவை
அர்த்தங்கள் சிதையும்
மொழிபெயர்ப்பிலும் சம்மதமில்லை
இருந்துவிட்டுப் போகட்டும்
என் கவிதைகள்
எனக்கும்
என் உடன் சேர்ந்து
உணர்ந்தவர்களுக்கும்
இடையில் மட்டுமே!
பின்குறிப்பு: நண்பர்களின் விமர்சனங்களுக்குப் பின், சில திருத்தங்கள் செய்யப்பட்ட மீள்பதிவு. ம்..! எப்படியோ... என் வலைப்பதிவு வரலாற்றிலும் ஒரு மீள்பதிவு ;)
9 மறுமொழிகள்:
நல்ல கவிதை அருள்...
/*இருந்துவிட்டுப் போகட்டும்
என் கவிதைகள்
எனக்கும்
என் உடன் சேர்ந்து
உணர்ந்தவர்களுக்கும்
இடையில் மட்டுமே!*/
கிளாசிக் அருள் :)
ஆஹா.. தல, ஜோதியில ஐக்கிய மாகிட்டீங்க...
//உங்கள் ஊடகங்களுக்கான
மொழியில் அவை இல்லை//
இது இப்படி இருந்தால்..
**உங்கள் ஊடகங்களுக்கான
மொழியில் இல்லை அவை**
நல்லா இருக்காதா?
பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி :)
//இது இப்படி இருந்தால்..
**உங்கள் ஊடகங்களுக்கான
மொழியில் இல்லை அவை**
நல்லா இருக்காதா? //
ஆமா தல, நானும் அப்படி யோசிச்சேன். ஆனா அடுத்த இரண்டு வரிகளோட சேர்த்து படிக்கறப்போ அது சரியா வரலன்னு தோணுச்சி... அதனால மாத்திட்டேன் :)
அருமை அருள் ...
./பழனி
//என்னிடமும் உண்டு
சில கவிதைகள//
மற்றவை எப்பொழுது...?
மிக அற்புதமான கருத்தாக்கம். உங்கள் கவிதைகளின் ரசனை மேலும் படிக்க தூண்டுகிறது. இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.
இருந்துவிட்டுப் போகட்டும்
என் கவிதைகள்
எனக்கும்
என் உடன் சேர்ந்து
உணர்ந்தவர்களுக்கும்
இடையில் மட்டுமே!
நன்றி முத்துக்குமார்!
//என் கவிதைகள்
எனக்கும்
என் உடன் சேர்ந்து
உணர்ந்தவர்களுக்கும்
இடையில் மட்டுமே!//
என்னை தானே சொல்லறீங்க அருள் :)
பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு ;)
Post a Comment