என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

09 December 2005

தலகோனா

பொதுவாய் கோயில்களுக்கு அவற்றின் சூழலையும், வடிவமைப்பையும் ரசிக்க மட்டுமே செல்வேன். எனக்கு மிகப்பிடித்த கோயில் - கங்கை கொண்ட சோழபுரம் கோயில். காரணம் அந்த புல்வெளியில் நிரம்பியிருக்கும் ரம்மியமான அமைதி. மென்மையான புல் வெளியில் விளைந்த கற்கோபுரங்கள் தரும் அழகு. அந்த சூழல் மிக ரசிக்கத்தக்க வகையில் இருக்கும். பிரார்த்தனைகளில் நம்பிக்கை இல்லாத போதும் எனக்கு மிகப்பிடித்த இடம் கோயில்களே!சென்னையில் இருப்பதால்,...
Read More

22 November 2005

14 October 2005

எதிர்ப்பக்கம்

மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்ட் -எப்போதும் போல் அவசரமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டிருந்தது. சுகி மாதிரி!சுகி. அதாவது சுகிர்தா. எங்களின் (சிவா என்கிற நான், சதீஷ், இளங்கோ) இனிய தோழி. படபடப்பானவள். எதிலும் ஆர்வமானவள். எப்போதும் துறுதுறுவென்றிருப்பவள். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும், அவள் சொன்ன மாதிரி காத்திருந்த எங்களை நோக்கி வந்தாள். எப்போதும் போல் படபடப்பாய் அவளுக்கே உரித்தான பாணியில், இடையிடையே தனக்கு...
Read More

26 July 2005

தோழியின் நினைவாய்...

என் ப்ரிய தோழியின் பிறந்த நாள் பரிசாய் வரைந்தது...(2001)மகாபலிபுரம் கடற்கரைக் கோயில் - எனக்கு மிகப்பிடித்த வடிவங்களில் ஒன்...
Read More

29 June 2005

பூங்கோதை

பூங்கோதையின் மதிய நேரத்துக் குட்டித்தூக்கம் கலைந்தபோது மணி நாலேகால். ஐந்து மணிக்குத் தண்ணீர் பிடிக்கச் செல்லவேண்டுமென மூளை அனிச்சையாய் உணர்த்த, உடைதிருத்தி எழுந்தாள். பின்கட்டுக்குச் சென்று குவளையில் இருந்த நீர் எடுத்து முகத்தில் அடித்து அலம்பியபோது உடம்பு சிலிர்த்தது. இது பூங்கோதைக்கு ரொம்பப் பிடித்த விஷயம். நன்றாய் தூங்கியெழுந்து குளிர்ந்த நீரில் முகம் கழுவியவுடன், முகத்தில் ஒரு தெளிவு படரும். உலகத்திற்கு...
Read More

அறிமுகம்

கைகுலுக்கிபெயர் சொல்லிபுதிதாய் அறிமுகமாகிறஎவரின் பெயரும்உடனே நினைவில்பதிவதில்லை எனக்கு.சந்திப்பின் முடிவில்மன்னிக்கச் சொல்லிமறுபடி பெயர் கேட்டுமனதில் பதிப்பேன்.நீ எனக்குஅறிமுகமானதும்அப்படித்தன்.அதன்பின்புதுப்படம் பார்த்து - அதைபிய்த்து அலசிய பொழுதுகள்;புது நாவல் படித்துஅதற்குபுது முடிவு தேடிய பொழுதுகள்;சமூகச் சமுத்திரத்தைசர்ச்சை வலை போட்டுசலித்தெடுத்த பொழுதுகள்;நான் நினைத்ததை நீயும்நீ நினைத்ததை நானும்பேச்சிலும்பார்வையிலும்அசைவிலும்உணர்ந்தஉணர்த்திய...
Read More

24 June 2005

மனசுக்குள்...

நித்தம் நிழலாய்அவனின் தொடரல்காவியமாய் நினைத்தெழுதும்கிறுக்குத்தனமான கவிதைகள்பண்டிகைகளுக்காய் காத்திருந்து தரும்வாழ்த்து அட்டைகள்பிறந்தநாளன்று வரும்பிடிக்காத பரிசுப்பொருள்இவையனைத்தும் அவனில்எனக்கு எரிச்சலூட்டினாலும்ஒருவனை கவர்ந்துவிட்டகர்வம் தரும்மனசுக்குள் ஒருமெளனமான பூரிப்பு....
Read More

06 May 2005

மங்கையர்க்கரசி

உறவுகள் எல்லாம்முறை சொல்லியேஅழைக்கும் அம்மாவைபெயர் சொல்லியழைக்கஅலுவலக நண்பருமில்லைஅடுக்களை தாண்டாத அவளுக்குஅப்பா பெயருக்கு கடிதமெழுதிஅம்மாவை விசாரிக்கும்பிறந்தவீடு தவிரகடிதம் எழுதவும்ஆளில்லை அவளுக்குஅசைகின்ற சொத்துக்கள்அம்மாவை அலங்கரித்தாலும்பெயர்சொல்லும் அசையாத சொத்துக்கள்அப்பாவின் பெயர் தாங்கியேஅவசர மளிகைக்குபாத்திரம் நீட்டும்அடுத்தாத்து மாமியும்'குமார் அம்மா' எனஎன் பெயர் இழுப்பாள்அம்மாவை அழைக்கதிடீரென...
Read More