என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

12 December 2006

எங்க கிராமத்துல... 1

இந்த நிழற்படங்களெல்லாம் எங்கள் கிராமத்தில் நான் எடுத்தது. எங்கள் ஊர்: சோழன்குடிக்காடு கிராமம், பெரம்பலூர் மாவட்டம். படங்களைப் பெரிதாகக் காண, படங்களின் மீது க்ளிக் செய்யுங்கள். ஊர்க்காவலன்ஊர்க்காவலர்கள்கழிநி தொட்டி மற்றும் சிதிலமடைந்த எங்கள் சேறுபட்டறைசேறுபட்டறையின் வேறு சில கோணங்கள்என் அக்கா மகள்சமீபத்தில் இந்தப் பூக்களையும் எங்கள் ஊரில் பயிரிட ஆரம்பித்திருக்கிறார்கள். எரியும் தழல் போன்ற இதன் அமைப்பு...
Read More

02 November 2006

கனவுப் பெண்

பழைய ஓவியம் - 3சின்ன வயதிலிருந்தே ஓவியர் மணியம் செல்வனின்(ம.செ.) ஓவியங்கள் என்றால் கொள்ளை ப்ரியம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காதவை அவரின் ஓவியங்கள். அதிலும் அவரின் கோட்டோவியங்களும் வாட்டர் கலர் ஓவியங்களும் மிகச்சிறப்பானவை. கல்கியில், கல்கியின் சிவகாமியின் சபதம் ம.செ. ஓவியங்களுடன் தொடராக வந்தபோது எனக்கு இரட்டை விருந்து! ம.செ படைத்த சிவகாமியின் அழகு சொல்லி மாளாது. அதில் வரும் அரண்மனைகளாகட்டும்,...
Read More

06 October 2006

சொச்சங்கள்

கவிதை, ஓவியம்,பார்வை, சைகை,மௌனம்உவமை, உருவகம்,செயல்முறை விளக்கம்இன்னும், இன்னும்...எதைக்கொண்டும் முழுதாய்சொல்லித்தீர்க்க முடிவதில்லை-பட்டுணர்ந்தவற்...
Read More

28 September 2006

இருத்தலின் சாத்தியங்கள்

அரும்பிக்கொண்டே இருக்கின்றனமொட்டுகள்-புதிது புதிதாய்மலர்ந்த சிலவும்வாடத்துவங்கும்மலர்ந்த நொடியிலிருந்தேமலரும் வாய்ப்பும்வாடும் நிதர்சனமும்அறிந்தே அரும்பும்புதிய மொட்டுகள்-ஆதி அரும்பின் பரவசத்திற்குசற்றும் குறையாத பூரிப்புடன்!பூங்கா அக்டோபர் 02, 2006 இதழில் இக்கவிதை தொகுக்கப்பட்டுள்ள...
Read More

21 September 2006

காணக்கிடைக்கும் தெய்வங்கள்

வாழ்வில் அலுக்கவே அலுக்காத விஷயங்கள் என்று ஒவ்வொருவருக்கும் சின்னதாகவாவது ஒரு பட்டியல் இருக்கும். என்னுடைய அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, குழந்தைகளும் அவர்களின் குறும்புகளும்!குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். நான் புரிந்துகொண்டவரை கடவுள் என்பது ஒரு நிலை. கண்ணில் படுகின்ற எதையும், அவற்றின் மீதான எந்த கற்பிதங்களும் அற்று, அவற்றை அவைகளாகவே பார்க்கும் பாக்கியம் அந்த நிலையில் மட்டுமே வாய்க்கும்....
Read More

13 September 2006

இழந்த கவிதைகள்...

எல்லோரைப் போலவேஎன்னிடமும் உண்டுசில கவிதைகள்உங்கள் ஊடகங்களுக்கானமொழியில் இல்லை அவைஅர்த்தங்கள் சிதையும்மொழிபெயர்ப்பிலும் சம்மதமில்லைஇருந்துவிட்டுப் போகட்டும்என் கவிதைகள்எனக்கும்என் உடன் சேர்ந்துஉணர்ந்தவர்களுக்கும்இடையில் மட்டுமே!பின்குறிப்பு: நண்பர்களின் விமர்சனங்களுக்குப் பின், சில திருத்தங்கள் செய்யப்பட்ட மீள்பதிவு. ம்..! எப்படியோ... என் வலைப்பதிவு வரலாற்றிலும் ஒரு மீள்பதிவு...
Read More

04 September 2006

பிடிபட்டவர்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 3: பிடிபட்டவர்கள்'விஸ்வநாதன் ராமமூர்த்தி' திரைப்படத்தில் விவேக் தன் மனைவியிடம் "யார் திருடன், சொல்லுபாப்போம்?" என்று கேட்பார். அதற்கு அவர் மனைவியின் பதில் - "திருடுறவன் தான் திருடன்!". இந்த கேள்விக்கான, நம் அனைவரின் பதிலும் கூட இதுவாகத்தான் இருக்கக்கூடும். ஆனால் இதை இல்லை என்று மறுத்துவிட்டு விவேக் பதில் சொல்வார்-"மாட்டிக்கிறவன் தான் திருடன்..!"அதைத் தொடர்ந்து வந்த நகைச்சுவைக்...
Read More

26 July 2006

பழைய ஓவியம் - 2

சின்ன வயதில் நான் வரைந்த ஓவியங்களையும் எழுதிய சில கதைகளையும், பல வருடங்களுக்குப் பிறகு இப்போது பார்க்க நேர்கையில் மிகுந்த ஆச்சர்யமாய் இருக்கிறது. அப்போது வரைந்த/எழுதிய சூழல், அப்போது அதைப் பார்த்த/படித்தவர்கள் அளித்த ஊக்கங்கள் எல்லாம் பசுமையாய் நினைவுக்கு வருகின்றன!பள்ளிக்கூட நாட்களில்(9-ம் வகுப்பிற்குள், எந்த வகுப்பு என நினைவில்லை!) எனது சின்ன வயது புகைப்படத்தைப் பார்த்து வரைந்தது இந்த ஓவியம்.இந்த...
Read More

15 July 2006

சிறுகதைகள்/கட்டுரைகள்

மா. சிவகுமார் அவர்களின் யோசனைப்படி, நான் எழுதிய சிறுகதைகளையும் கட்டுரைகளையும் இங்கே தொகுத்திருக்கிறேன். இனி எழுதப்போகும் சிறுகதைகள்/கட்டுரைகளும் இங்கு சேர்க்கப்படும்...சிறுகதைகள்:5. மரணம் என்றொரு நிகழ்வு4. பெரிய மனுஷன்3. நாங்க போட்ட நாடகம்2. எதிர்ப்பக்கம் 1. பூங்கோதைகட்டுரைகள்:6. எழுத மறந்த நாட்குறிப்புகள் 4: காணக்கிடைக்கும் தெய்வங்கள்5. எழுத மறந்த நாட்குறிப்புகள் 3: பிடிபட்டவர்கள்4. எழுத மறந்த நாட்குறிப்புகள்...
Read More

14 July 2006

மரணம் என்றொரு நிகழ்வு

(தேன்கூடு போட்டிக்கு எழுதிய சிறுகதை)சுந்தர் இறந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவன் மனைவியை இன்று ஸ்பென்சரில் பார்த்தேன். பார்க்கிங்கில் என் வண்டிக்கு இடம் தேடிக்கொண்டிருந்த போது என்னைக் கடந்து சென்றுகொண்டிருந்தாள். உடன் இருந்தவர் யாரெனத்தெரியவில்லை. அனேகமாக அது ப்ரேம் சொன்ன 'அவரா'கத்தான் இருக்க வேண்டும்! அவன் சொன்ன மாதிரி அவர்கள் இருவருக்கும் இடையில் பார்த்தமாத்திரத்திலேயே ஒரு அன்னியோன்யத்தை...
Read More

03 July 2006

ஆறு great வழியல்கள் :)

முன்பு நாலு விளையாட்டிற்கு அழைத்த உண்மை இப்போது ஆறு விளையாட்டிற்கும் அழைத்திருக்கிறார்கள். நன்றி உண்மை :)முன்னாடியே நாலு நாலா என்ன பாதிச்சதெல்லாம் எழுதிட்டதால, இப்போ கொஞ்சம் வித்தியாசமா வேற எதாச்சும் எழுதலாமேன்னு யோசிச்சேன். நாம ஏதாவது இக்கட்டுல மாட்டி வழியறப்போ மத்தவங்களுக்கு அது ஜாலியாவே இருக்கும். ஏன் கொஞ்ச நாள் கழிச்சு யோசிச்சுப் பாத்தா நமக்கே அது ஜாலியாத்தான் இருக்கும்! வழியறது ஒரு கலை! நமக்கு...
Read More

27 June 2006

சில புரிதல்கள்

எதிர்பாராமல் இன்றுஉன் குழந்தைகளுடன்நீ எதிர்ப்பட்ட சந்திப்பில்வெறுமையாய்ப் புன்னகைத்துபரஸ்பரம் குடும்பநலம்விசாரித்துக் கொள்ளமுடிகிறநம் உள்ளங்கள்மாறிமாறிச் சொல்லியிருக்கின்றன-"நீ இல்லாதஒரு வாழ்க்கையைநினைச்சு கூடபாக்க முடிலடா..."யார் இல்லாவிட்டாலும்யாரும் வாழமுடியுமெனகடந்த சில வருடங்களில்மெளனமாய்சொல்லிக் கொடுத்திருக்கிறதுகால...
Read More

19 June 2006

பெரிய மனுஷன்

(ஜூன் 2006 - தேன்கூடு போட்டிக்கு எழுதிய சிறுகதை)நாளைக்குக் காலையில் வீட்டில் இருப்போம் என்று நினைத்ததுமே மனசு இறக்கை கட்டிக்கொண்டது. அனேகமாக பஸ்ஸில் அனைவரும் தூங்கிவிட்டார்கள். நான் மட்டும் முகத்திலறையும் குளிர்ந்த காற்றை ஒரு வன்மையுடன் தாங்கிக்கொண்டு கொட்டக் கொட்ட விழித்திருந்தேன். நானும் கவனித்துவிட்டேன், ஊரிலிருந்து ஹாஸ்டலுக்குத் திரும்பும்போதுதான் பஸ்ஸில் ஏறியவுடன் தூக்கம் வருகிறது எனக்கு.கடந்த...
Read More

12 June 2006

நாங்க போட்ட நாடகம் 2

முதல் பகுதி இங்கே...ஒரு வழியாக ஒத்திகைகள் முடிந்து அரங்கேற்ற நாளும் வந்தது. முன்னரே திட்டமிட்டபடி, அன்று காலையிலேயே ஒவ்வொருவராக, ஆனதாண்டவபுரம் வினோத் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தோம். வீடு நல்ல விசாலமாய் இருந்தது. ஓட்டு வீடுதான் என்றாலும் பெரிய திண்ணைகள், விசாலமான ஆளோடி, வீட்டின் நடுவே மழை வெயில் காற்று எல்லாம் கொண்டு தரும் வாசல் என வசதியாய் இருந்தது. இந்த எல்லா இடங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி...
Read More

06 June 2006

நாங்க போட்ட நாடகம்

(சற்றே பெரிய சிறுகதை)அந்த நாடகப்போட்டியில் கலந்துகொள்ள நாங்கள் முடிவுசெய்ததற்கு இரண்டு மிக முக்கியமான காரணங்கள் இருந்தன. முதலாவதும், மிக முக்கியமானதுமான காரணம் எங்கள் எதிரி(பின்னே... நாங்கள் போட்டியிடுகிற அத்தனை மேடையிலும் எங்களை ஜெயிக்கிறவள் எங்கள் எதிரிதானே?) பத்மா & கோ அந்த போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை! இரண்டாவது, அந்த போட்டிக்கு நடுவராக வரப்போகிறவர் எங்கள் டீமில் இருக்கும் வினோத்தின்...
Read More

27 May 2006

பழைய ஓவியம் 1

கல்லூரிக் காலங்களில், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் "தொட்டால் தொடரும்" படித்து அவரின் தீவிர வாசகனாகிவிட்டேன். உண்மையில் அந்த நாவலைத் தொட்டால் முடியும்வரை தொடரும். பாதியில் வைக்க முடியாது. ஒவ்வொரு பாத்திரத்தின் குணாதிசயங்களையும் ஒளிந்திருந்து பார்த்ததுபோல் யதார்த்தமாய் எழுதியிருப்பர். கதையின் சம்பவங்கள் கூட வெகு இயல்பாய் நிகழ்வதுபோல் இருக்கும். முடிவு மட்டும் நமது தமிழ்சினிமாத்தனமாக இருக்கும்.அப்போது...
Read More

17 May 2006

கடிதங்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 2: கடிதங்கள்சில வருடங்களுக்கு முன்பு எனது வாழ்தலின் அத்தியாவசியங்களுள் ஒன்றாக விளங்கிய கடிதங்கள், இன்று வெறும் நினைவுச்சுவடுகளாக மட்டுமே எஞ்சியிருக்கிறது. கடிதங்கள் என் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகப்பெரியவை. அப்படியிருந்த கடிதங்களை இன்று சுத்தமாக மறந்தே போய்விட்டது மிக ஆச்சர்யமாய் இருக்கிறது!நேற்று என் நண்பன், தனது திருமண அழைப்பிதழ்களை அனுப்புவதற்காக, அருகில் தபால்...
Read More

02 May 2006

இலக்கற்ற பயணங்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 1: இலக்கற்ற பயணங்கள்சின்ன வயதிலிருந்தே எங்கும் எதிலும் இலக்குகள் வேண்டும் என்றே போதிக்கப்பட்டதாலோ என்னவோ, இலக்கற்ற பயணங்களின் சுவை உணர வாழ்வின் பெரும்பகுதி கடக்கவேண்டியிருந்தது. இலக்கில்லாமல் திரிதல் சுகம். இத்தனை மணிக்கு இன்னாரை பார்க்கவேண்டும் அல்லது இதைச்செய்யவேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல் பயணிப்பதின் சுகம் அதை அனுபவித்தவர்க்கே தெரியும்.+2 நாட்களில் நண்பன் புருஷோத்தமனுடன்...
Read More

13 April 2006

கருங்கற் சோலை

கங்கைகொண்டசோழபுரம் கோயிலை பார்க்கும்போது, கருங்கற் பூக்கள் விளைந்த ஒரு சோலை போலத்தான் இருக்கும். ஏனோ தெரியவில்லை, இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலைவிட, அவரின் மகன் இராஜேந்திர சோழன் கட்டிய இந்த கோயிலை மிகவும் பிடித்துவிட்டது!இந்த புகைப்படங்களை எடுக்கச்சென்றபோது மத்தியில் இருக்கும் பெரிய கோபுரத்தில் வேலைப்பாடுகள் நடந்துகொண்டிருந்ததால் சாரம் கட்டி மறைத்திருந்தார்கள். அந்த பிரம்மாண்டம் நீங்கலாக...
Read More

23 March 2006

எழுத மறந்த நாட்குறிப்புகள்

வாழ்வின் அத்தியாவசியங்களில் ஒன்று பகிர்தல். எல்லோரும் எல்லா இடங்களிலும் எதையாவது யாருடனாவது பகிர்ந்துகொண்டேதான் இருக்கிறோம். அது ஒரு உணர்வாகவோ, எண்ணமாகவோ அல்லது பொருளாகவோ... எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பகிர்தல் மிக அவசியமாகிறது. phone, mobile phone, email, chat, blog என்று நமது தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை பகிர்தலை சார்ந்தே இருக்கிறன. பகிர்தல் இல்லாத ஒரு வாழ்வை நினைத்துப்பார்க்கவே...
Read More

17 March 2006

யார் இவர்?

கல்லூரி நாட்களில் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை செம போர் அடித்து உட்கார்ந்திருந்தபோது ஒரு வாரப்பத்திரிக்கையில் கண்ட புகைப்படம் ரொம்ப expressive-வா இருக்கேன்னு impress ஆகி பண்ணிய pencil sketch இது. சென்ற ஞாயிற்றுக்கிழமை செம போர் அடித்ததால் time pass-க்காக என் பொக்கிஷங்களை கிளறும்போது கிடைத்தது. உங்கள விட்டா வேற யார் கிட்ட இதெல்லாம் share பண்ணிக்க முடியும்?! பாத்திட்டு இது யார்னு சொல்லுங்க. கரெக்டா சொல்லிட்டிங்கன்னா...
Read More

14 March 2006

சங்கிலித் தொடர்...

உண்மை அவர்களின் அழைப்பை ஏற்று இத்தொடரில் நானும் இணைகிறேன்.எவ்வளவோ மனிதர்களும், சம்பவங்களும் நிரம்பிய இந்த வாழ்வில், கீழே தொகுத்துள்ள ஒவ்வொன்றிலும் நான்கை மட்டும் குறிப்பிடுவது மிக கடினம். அதிலும் திரைப்படங்கள்... chance-ஏ இல்ல!இருந்தாலும்... இந்த சங்கிலித் தொடரின் நியதிக்கு உட்பட்டு மனதில் சட்டென தோன்றிய நான்குகள் இங்கே...பணிகள்:கல்லூரி நாட்களில், A.V.C கல்லூரி மாணவர் இதழான "இளந்தூது" -வில் இணை ஆசிரியராக.அதே...
Read More